நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொடு சிகிச்சை புதிய மருத்துவம்

மனம் சார்ந்த பிரச்னைகளையும், உடல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் ரெய்கி மருத்துவம் போன்ற 30க்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளையும், பயிற்சி வகுப்புகளையும் மருந்து மாத்திரைகள் ஏதுமின்றி லாகவமாக கையாண்டு வருகிறார் பிரபல அலோபதி மருத்துவரான மீனாட்சி.

News image
Updated On :22 ஜூன் 2015, 12:02 pm

ஸ்ரீதேவி குமரேசன

மனம் சார்ந்த பிரச்னைகளையும், உடல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் ரெய்கி மருத்துவம் போன்ற 30க்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளையும், பயிற்சி வகுப்புகளையும் மருந்து மாத்திரைகள் ஏதுமின்றி லாகவமாக கையாண்டு வருகிறார் பிரபல அலோபதி மருத்துவரான மீனாட்சி. இவர் பல வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தவர். பெங்களூரு மற்றும் சென்னை லாயிட்ஸ் சாலையில் இவரது பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அவரை சந்தித்தோம்:

""அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபங்சர் போன்ற மருத்துவமுறைகளை சேர்ந்ததுதான் ரெய்கி மருத்துவமும். இதன் தாயகம் ஜப்பான் நாடாகும். மருந்து மாத்திரைகள் ஏதுமின்றி தொடு முறை சிகிச்சையின் மூலம் உடலில் உள்ள எப்படிப்பட்ட நோயையும் இதன் மூலம் குணப்படுத்திவிடலாம். 18ஆம் நூற்றாண்டில் மகா குரு மிக்காயூசுயி என்பவர் மூலம் ரெய்கி மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது. ரெய்கி என்பதில் ரெய் என்கிற ஜப்பானிய சொல்லுக்கு பிரபஞ்சம் என்று பொருள். "கி' என்றால் சக்தி, சக்தியால் குணப்படுத்துதல். அதாவது நம்மைக் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்திதான் மின்காந்த அலை. அதை முறையாக பயன்படுத்தி நோயைக் குணப்படுத்துவதே ரெய்கி முறையாகும்.

நான் எம்.பி.பி.எஸ்.,டி.ஜி.ஓ. முடித்துவிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றினேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரெய்கி முறையைக் கேள்விப்பட்டு கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதை என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பயன்படுத்திப் பார்த்தேன். அதேசமயம் அலோபதி மருந்துகளும் அளித்து கூடுதலாக இதையும் சேர்த்து சிகிச்சை அளித்ததில் நல்ல பலன் கிடைத்தது.

மேலும் அவ்வப்போது பல வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதன் மூலம் ஆங்காங்கே உள்ள மருத்துவமுறைகளையும் கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் "பேச்' என்னும் மலரின் மூலம் மலர் மருத்துவம் செய்வது, "சோஜுக்' வைத்தியம் என்பது தானியங்களைக் கொண்டு செய்வது, ஒருவரின் டி.என்.ஏவை வைத்து அவரது உடலுக்கு தகுந்தபடி நோய் குணமாகவோ, அல்லது அவர் வாழ்க்கையில் முன்னேறவோ பயிற்சி அளிப்பது, (உஞ்ஹ்ல்ற் இஹழ்ற்ர்ள்) எகிப்து அட்டைகளைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவது இப்படி 30க்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளும், பயிற்சி வகுப்புகளும் இருக்கின்றன.

இவை அனைத்துமே எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்து மாத்திரைகள் ஏதுமில்லாத சிகிச்சை முறைகள் ஆகும்.

ஒருகட்டத்தில் இவ்வளவு நல்ல மருத்துவமுறைகளை நாம் பிறருக்கும் கற்றுக் கொடுத்துப் பயன் பெறச் செய்யலாமே என்று தோன்றியது. இதனால் அரசு வேலையை விட்டுவிட்டு பெங்களூருவில் "எனர்ஜி நெஸ்ட்ஸ்' என்ற பயிற்சி மையத்தைத் தொடங்கி பலருக்குச் சிகிச்சையும், பயிற்சியையும் அளிக்கத் தொடங்கினேன்.

சென்னையில் இருந்து பிரபலங்கள் பலரும் என்னிடம் பயிற்சி பெறவும், சிகிச்சை பெறவும் வந்தனர். இதனால் சென்னை லாயிட்ஸ் சாலையிலும் ஒரு பயிற்சி மையத்தை துவங்கினேன். மற்றும் விருதுநகரில் 18 ஆண்டுகளாக முற்றிலும் இலவசமாக "ஹீலிங் சென்டரையும் நடத்தி வருகிறோம். இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, பாங்காக், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று சிகிச்சையும், பயிற்சியும் அளித்து வருகிறேன்.

இந்த சிகிச்சைகளின் மூலம் மன நோய் மற்றும் மன அழுத்தம் தீர, பிள்ளைகளின் படிப்பு முன்னேற,தொழிலில் முன்னேற, குழந்தையின்மை தீரவும் மேலும் அனைத்து விதமான உடல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.

உதாரணமாக புற்றுநோய் உள்ளவர்களுக்கு கீமோதெரபி அளிக்கப்படும் போது உடல் எரிச்சல் ஏற்படும். முடி கொட்டும். அப்போது ரெய்கியை இணைத்துக் கொடுத்தால் அந்த எரிச்சல் இருக்காது. முடி கொட்டுவதும் குறையும். அதேபோன்று ஒருமுறை வேலூரில் இருந்து இருதய பிரச்னை உள்ளவர் ஒருவரை இனி காப்பாற்ற முடியாது என்ற நிலையில் என்னிடம் கொண்டுவந்தனர். அவரை ரெய்கி சிகிச்சையின் மூலமும் மற்றும் சில பயிற்சிகளின் மூலமும் குணப்படுத்தினேன். அதன் பிறகு இன்றும் அவர் நலமுடன் இருக்கிறார்.

அதேபோன்று என்னிடம் "ஹாரா ஸ்கேனர்' என ஒரு கருவி இருக்கிறது. இந்த கருவியின் மூலம் மனித உடலில் உள்ள மின் காந்த சக்தியை அளவிட்டு அதன் மூலம் ஒருவரது உடலில் என்ன நோய் இருக்கிறது என்றும், வருங்காலத்தில் அவருக்கு என்ன நோய் வரலாம் என்றும் கூறிவிட முடியும்.

சமீபத்தில் ஓர் ஆய்வின் மூலம் கண்டறிந்தது என்னவென்றால் ஒருவருக்கு ஏற்படும் மனப் பிரச்னையோ, உடல் சார்ந்த பிரச்னைகளோ அல்லது விபத்துக்களோ ஏற்படக் காரணம், அவர் குடியிருக்கும் வீட்டில் இருக்கும் மின்காந்த அலைகளின் சக்தியினால் ஏற்படும் பாதிப்புகள்தானாம்.

முன்பெல்லாம் குடியிருக்கும் பூமியில் இருந்து ஆரோக்கியமான மின் காந்த அலைகள் கிடைத்தது. ஆனால் இப்போது உடலுக்கு வேண்டாத அலைகள்தான் அதிகம் கிடைக்கின்றன. அதனாலேயே மனிதனுக்கு பிரச்னைகள் அதிகரிக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு அவரவர் வீட்டிற்குச் சென்று அங்கே வீட்டினுள் இருக்கும் மின்காந்த அலைகளைச் சோதித்து தேவைக்கு தக்கபடி மின்காந்த சக்தியை சரி செய்து தருகிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.