கின்னஸ் சாதனை படம்

டிட்டு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஜெயிக்கபோவது யாரு'. வந்தனா, ஆர். பாண்டியராஜன், சீனிவாசன், கோட்டி, சைதன்யா உள்ளிட்டோர்
கின்னஸ் சாதனை படம்
Updated on
1 min read

டிட்டு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஜெயிக்கபோவது யாரு'. வந்தனா, ஆர். பாண்டியராஜன், சீனிவாசன், கோட்டி, சைதன்யா உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் இப்படத்தை எழுதி இயக்குகிறார் சக்தி ஸ்காட்.
 படம் குறித்து இயக்குநர் பேசும்போது... "கார் பந்தயத்தை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அண்மைக் காலமாக கார் பந்தயம் என்பது வெகுவாக பெருகிவிட்டது. கடந்த நூற்றாண்டில்தான் கார் பந்தயம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை பெருகி வளர்ந்தது. இந்த பந்தயத்தின் பின்னணியை பார்த்தால், பல விதமான சுவாரஸ்யங்கள் கொட்டி கிடந்தன. அதை சினிமாவுக்கேற்ற கதைக் களமாக்கி கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சியில் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐன்ஸ்டீன், டாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல வித தோற்றங்களில் சீனிவாசன் தோன்றுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினிமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன். இதுவரை ஒரு படம் எடுப்பதற்கான 15 துறைகளையும் கையாண்ட ஒரே ஒரு நடிகர் ஜாக்கிசான்."úஸôடியாக்' என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012}ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார். அதன் பிறகு, 29 துறைகளிலும் பணியாற்றி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளேன்'' என்றார் சக்தி ஸ்காட்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com