கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நல்ல இசை மனதிற்கு மருந்து: நடிகை "ஊர்வசி' சாரதா

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் கொண்டாடப்படும் நடிகையாக விளங்குபவர். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற முதல் இந்திய நட்சத்திரம்.

News image
Updated On :11 மார்ச் 2019, 12:57 pm

சலன்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் கொண்டாடப்படும் நடிகையாக விளங்குபவர். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற முதல் இந்திய நட்சத்திரம். நடிப்புக்கான அன்றைய தேசிய விருது "ஊர்வசி விருது' என்று அழைக்கப்பட்டதால் " ஊர்வசி சாரதா' என்று அழைக்கப்படுபவர். தனக்கு "பிடித்த பத்து' பற்றிக் கூறுகிறார். 

சிந்தனை: நாம்தான் சரியானவர்கள் என்று நினைப்பது ரொம்ப தப்பு. நம்மை பார்க்கிறவங்களுக்குத் தான் நமது குறைகள் தெரியும். நமக்கே நம் குறைகள் தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடந்துகொள்வோம்.  என்றுமே நம் சிந்தனையும் செயலும் நல்லதாக இருந்தால் நாம் என்றுமே சிறப்பாக இருப்போம். 

இடம்: நான் இருக்கும் இடமே சொர்க்கம் என்று தான் சொல்வேன். பலர் தங்கள் பிறந்த இடத்தைச் சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் நான் பிறந்த இடம் ஆந்திரபிரதேசத்தில் உள்ள தெனாலி. ஒரு நடிகைக்கு மொழி, இடம், ஜாதி, என்று எதிலும் பேதம் இல்லை. காரணம் நான் ஒரு இந்தியன். ஆனாலும் எனக்கு விருப்பமான இடம் நான் வசிக்கும் இந்த சென்னை  நகரம்தான். 

இசை:எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. உலகிலேயே இசைக்கு என்று ஒரு மாதத்தையே ஒதுக்கியது சென்னை மாநகரம் தான். டிசம்பர் மாத இசை வெள்ளம் நம் நகரையே ஆக்கரமிக்கும்.  பசி, தூக்கம், வேலை என்று கூடப் பார்க்காமல் எல்லோரையும் இந்த டிசம்பர் இசை சீசன் மகிழ வைக்கிறது. ஒரு கச்சேரியை கேட்டு விட்டு மற்றொரு கச்சேரிக்கு, பேசக் கூட  நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பார்கள். முன்பே இந்தக் கச்சேரியைக் கேட்கவேண்டும் என்று திட்டமிடுதலும் உண்டு. இப்படி இசையைக் கேட்பதற்கு நான் என்றும் ஆசைப்படுவேன். நல்ல இசை என்றால் மனதிற்கு அருமருந்து.

உணவு: நான் சுத்தமான சைவம். நான் சுமார் 37 வருடங்களுக்கு முன் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். அதனால் நான் சைவம்தான் எனக்கு விருப்பமான ஒன்று புளிக்காத தயிர். 

மாணிகேஸ்வரி அம்மா: தனது 10 வயதில் இருந்து சாப்பாடு கிடையாது, தண்ணி குடிக்க மாட்டார். இன்றும் வாழ்கிறார். எப்படி என்று நீங்கள் கேட்டால் அதற்கு யாருக்கும் விடை தெரியாது. ஹைதராபாதில் இருந்து குல்பர்கா போகும் வழியில் யானகொந்தே என்ற இடத்தில் வாழ்கிறார். அதிகமாக வெளியில் வரமாட்டார். அங்குள்ள சிறிய மலையில் அவர் இன்றும் வாழ்கிறார். 
நார்வே: சிறந்த நாடு. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அந்த நாட்டிற்குச் சென்றேன். எங்களை வரவேற்று  அழகான விழாவை நடத்தினார்கள். அங்குள்ள ஒரு பெண்மணி தனது வீட்டில் இருந்து நடந்து வந்து மெட்ரோ ரயில் ஏறி ஒரு ஸ்டேஷனில் இறங்கி ஒரு டாக்ஸி பிடித்து வேறு ஒரு இடம் வந்து, அங்குள்ள அரசாங்க காரில் ஏறி அலுவலகம் வருவார். அவர் அந்த நாட்டின் அப்போதைய சபாநாயகர். நான் இதை ஏன் கூறுகிறேன் என்றால், அந்த அளவிற்கு அவர்கள் எல்லோரும்  சிம்பிளாக இருக்கிறார்கள். 

விருதுகள்: நிறைய விருதுகள் நான் வாங்கினாலும் முதல் பெரிய விருது என்றால் அது ஊர்வசி விருது (அன்று அதற்கு ஊர்வசி என்று பெயர் இருந்தது) தான். அப்பொழுது எனக்கு வயது 22. இரண்டாவது ஊர்வசி விருது கிடைத்த படம் அடூர் கோபால கிருஷ்ணன் இயக்கிய "சுயம்வரம்'. மூன்றாவது ஊர்வசி விருது கிடைத்தது  தெலுங்குப் படமான "நிமஜ்ஜனம்'. இரண்டு முறை பிலிம் ஃபேர் விருது, கேரள அரசின் திரைப்பட விருதையும், ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதும் இதில் அடக்கம். "துலாபாரம்' நான்கு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட போது, என்னையே அதில் நடிக்க அழைத்தது ஒரு பெரிய சாதனை என்று எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள்.  எனக்குக் கிடைத்த கெளரவ டாக்டர் பட்டம். தேர்தலில் நின்று, வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றது.  நான் தெலுங்கு, மலையாளப் படத்தில் நடித்த போது மேற்கு வங்க பத்திரிகையாளர் சங்கம் என்னை கெளரவித்துப் பாராட்டியது. இந்த விருதுகள் எல்லாம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் என் மீதுள்ள பாசத்தையே காட்டுகிறது.   

பழக்க வழக்கங்கள்: குறைந்த உணவு, பேச்சு, மற்றவர்களைத் துன்புறுத்தாத செயல்கள் இவைகளை நான் கண்டிப்பாகப் கடைபிடிக்கிறேன். உபதேசங்களை என்றுமே, யாருக்கும் சொல்வதில்லை. இன்றைய வேகமான காலத்தில் அதை யாரும் விரும்புவதில்லை. 

இன்றைய படங்கள்: இன்று வரும் படங்களைப் பார்த்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதன் முடிவும் (ரிசல்டும்) அதுபோலேவே உள்ளது. 10 படங்கள் வந்தால் 2 படங்கள் மட்டுமே ஓடுகிறது.  மற்ற 8 படங்கள் அட்ரஸ் இல்லாமல் போகின்றன. காரணம் கதை என்று ஒன்றும் இல்லை. கதை மட்டும் சரியாக இருந்து விட்டால், நடிப்பு, தொழில்நுட்பம் எல்லாம் சரியாக வந்துவிடும்.  

வண்ணம்: உடை விஷயத்தில் நான் என்றும் உடுத்த விரும்புவது புடவை தான். அதிலும் பாதி  வெண்மை கொண்டது.  அதுவே நான் அதிகம் விரும்பும் வண்ணம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.