ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் நேரடியாக இசை பயின்ற சீடர்களில் மதுரை மணி ஐயர், எஸ்.ஜி. கிட்டப்பா தவிர, நெல்லை டி.வி. கிருஷ்ணமூர்த்தி, வித்வான் ஸ்ரீனிவாசன், ராமநாதபுரம் சி.எஸ். சங்கரசிவம் சேர்வை, பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், அப்பாக்குட்டி ஐயர், என்.வி. நாராயணன், ஆபிரஹாம் பண்டிதரின் மகனான சுந்தர பாண்டியன், வக்கீல் டி. ஆர். மகாலிங்கம் ஐயர், பெலக்குவாடி ஸ்ரீனிவாச ஐயங்கார், பெங்களூர் வரதராஜ ஐயங்கார், நாராயண ஐயர், மும்பை ஹெச். யக்னேஸ்வர பாகவதர், வயலின் ஏ. வெங்கடேஸ்வரன், ஏ. முத்தையா, வயலின் எம். சங்கர நாராயண ஐயர், வித்வான் கே.ஏ. ஸ்ரீனிவாசன், ஹரிஹர பாகவதர், ஹெச். எம். வைத்தியலிங்க பாகவதர், வீணை சுப்பிரமணிய ஐயர், வடக்கனாஞ்சேரி மணி பாகவதர், நாதஸ்வர வித்வான் ஹரிகேசநல்லூர் மூக்காண்டி கம்பர் மற்றும் பாரசாலை பொன்னம்மா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பாரசாலை பொன்னம்மா தற்பொழுது
திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.