திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தெரியுமா?

நாம் உண்ணும் அசைவ உணவு வகைகளை தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலை குறைக்க முடியுமாம்.

News image
Updated On :5 டிசம்பர் 2020, 4:23 pm

தினமணி


பூமியின் வெப்பம் அதிகரிக்கக் காரணம்

நாம் உண்ணும் அசைவ உணவு வகைகளை தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலை குறைக்க முடியுமாம்.

இது குறித்த புதிய ஆய்வில் அசைவத்திற்கு பதிலாக பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி உணவுகளை சாப்பிடுவதால் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் (எஏஎ) அளவை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வேளை அமெரிக்கர்கள் தொடர்ந்துஅசைவ உணவுகளை விட காய்கறிகளை உண்டால் இந்த ஆண்டு வெப்பமயமாதல் குறைவதை உணர முடியுமாம்.

மேலும், வெப்ப மயமாதலை குறைக்க ஆட்டோமொபைல் சாதனங்களை குறைப்பது, அதன் உற்பத்தியை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இதன் மூலமாகவே எளிதாக குறைக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்கர்கள் அசைவ உணவுகளை வாங்க ஆர்வம் காட்டும் அளவுக்கு காய்கறிகளை வாங்குவதில்லை.


நிலவின் வயது 451 கோடி!

Story image

சுமார் 451 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலா உருவானது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1971-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம், அப்பல்லோ 14 விண்கலம் மூலம் மனிதர்களை முதன் முறையாக சந்திரனுக்கு அனுப்பியது. சந்திரன் எப்போது உருவானது, அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்பது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதன்படி, சந்திரனில் உள்ள தாதுக்கள் மற்றும் கனிமத்தை வைத்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சந்திரன் 451 கோடி ஆண்டுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பல உயிர்கள் வாழும் பூமியின் வயது 4,500 கோடி ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.


ரயிலில் மட்டும் ஏன் இப்படி?

Story image

ரயிலில் மட்டும் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செய்யமுடியாது அதற்குக் காரணம் உண்டு. நாம் டிக்கெட் பதிவு செய்யும் போது, எல்லா கோச்சிலும், மத்திய பகுதியில் இருக்கும் இடங்கள்தான் முதலில் பதிவு செய்யப்படும். அதற்கடுத்து இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும். படுக்கை வசதி பதிவுகளும்  இப்படித்தான். ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால்தான் ரயில் ஓடும்போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும்.

ரயில் ஓடும்போது அதன் சமநிலைபாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதனால்தான் ரயில்கள் வேகமாக செல்லும்போது விபத்து ஏற்படாமல் பயணிக்க முடிகிறது.


10 மில்லியன் பக்கங்கள்

Story image


பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் டுவிட்டர். இது 2006-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி நிறுவப்பட்டது. டுவிட்டர் நிறுவனம், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. கடந்த மார்ச் மாத கணக்குப்படி, 3.10 கோடி பயனாளர்களை டுவிட்டர் கொண்டுள்ளது.

டுவிட்டர் லோகோவில் இருப்பது, லாரி எனும் பறவையாகும். டுவிட்டரை பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதைத்தான் கடவுச்சொல்லாக (பாஸ்வேர்ட்) வைத்துள்ளனர். டுவிட்டரில் ஒருநாள் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால், 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். டுவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு பதிவு (டுவீட்) கூட செய்ததில்லை. இணையம் பயன்படுத்தும் 90 சதவீதம் பேர் டுவிட்டரை பயன்படுத்துவது இல்லை.


அரிதான நிகழ்வு

Story image

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆர்க்டிக் பகுதியில் சராசரியைவிட சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் இருக்கும். இந்த முறை அது 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இது போன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வடதுருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.


ஆங்கிலேயர்கள் நடைமுறை

Story image

ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்புக்கு பயன்படுத்திய பேனாவை நீதிபதி உடைத்து விடுவார். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறைதான் இது. இதற்கு காரணம், உயிரை குடித்த பேனா முனையை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகவும், சோகத்தை வெளிப்படுத்தவும் இதை செய்து வந்துள்ளனர். ஆனால், நமது இந்திய சட்டப்புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா பேனா முனையை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில்தான் இந்த முறை பின்பற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.