தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிறந்த நாளில் ட்ரெய்லர்

சமீப காலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 12:30 am

DIN


சமீப காலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில்  உருவாகி வரும் படம் "எதிர் வினையாற்று'. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் புகைப்படக் கலைஞர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். 

அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே திரைக்கதை.

"எதிர் வினையாற்று' படத்தின் கதாநாயகனாக அலெக்ஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். 

 ஆர்.கே.சுரேஷ், "ஆடுகளம்' நரேன், லட்சுமி பிரியா,சம்பத்ராம், அனுபமா குமார்,   பிளாக் மணி உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர்.  சனம் ஷெட்டியின் பிறந்த நாளான கடந்த 12 -ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 
இந்த ட்ரெய்லருக்கு இணைய தளங்களில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.  தாயின் அருள் புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் தயாரித்து வரும் இப்படம்  உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.  யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.