தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

"என்ன அம்பி, உடம்பு எப்படி இருக்கு?'

பி.யூ.சின்னப்பாவைப் பற்றி டி.ஆர். மகாலிங்கம் தவறாக விமர்சனம் செய்ததாக யாரோ சிலர் பி.யூ. சின்னப்பாவிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 12:30 am

ஆர்.கே. லிங்கேசன்

பி.யூ.சின்னப்பாவைப் பற்றி டி.ஆர். மகாலிங்கம் தவறாக விமர்சனம் செய்ததாக யாரோ சிலர் பி.யூ. சின்னப்பாவிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். "இதை பி.யூ.சின்னப்பா எப்படி எடுத்துக் கொள்வாரோ? டி.ஆர். மகாலிங்கத்துக்கு என்ன நடக்குமோ?' என சக நடிகர்களான வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன் மற்றும் பலர் பதைபதைத்துக் கொண்டிருந்தனர். காரணம், சின்னப்பா மூர்க்கக் குணம் கொண்டவர். சென்னை நியூடோன் ஸ்டுடியோவில் அன்று ஏக பரபரப்பு.

அப்போது பி.யூ. சின்னப்பாவின் கார் வந்து நின்றது. அங்கு நின்று கொண்டிருந்த சக நடிகர்களை புழு பூச்சியை பார்ப்பது போல் பார்த்தார், காரிலிருந்து இறங்கிய சின்னப்பா, மகாலிங்கத்தைப் பார்த்து ""என்ன அம்பி, உடம்பு எப்படி இருக்கு?'' என்று ஒரு மாதிரியாகக் கேட்டவாறே மகாலிங்கத்தின் கையைப் பிடித்து தன் காருக்குள் ஏறச் சொன்னார்.

அங்கு நின்று கொண்டிருந்த சக நடிகர்கள் "என்ன அசம்பாவிதம் நடக்கப் போகிறதோ?' என ஆளாளுக்குப் பேசிக்கொண்டு நின்றனர். கார் ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தது. "சரி, தனியா கூட்டிக் கொண்டு போய் சின்னப்பா மகாலிங்கத்தைப் பின்னி எடுக்கப் போகிறார்' என ஆளாளுக்கு கவலை கொண்டனர். பிறகு அவர்கள் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகேயிருக்கும் மகாலிங்கத்தின் அலுவலகத்திற்குப் போனார்கள். அதுதான் அவரது வீடும் கூட.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மகாலிங்கம் திரும்பி வந்தார். வி.கே.ராமசாமி கவலையுடன் "என்ன நடந்தது?' என்று கேட்க, யாரோ சிலர் பி.யூ.சின்னப்பாவிடம் "சின்னப்பாவின் பாட்டெல்லாம் ஒரு பாட்டா? காட்டுத்தனமாகத் கத்தினா அது பாட்டாயிடுமா?' என்று நான் சொன்னதாக கோள் மூட்டியிருக்காங்க. சின்னப்பா அண்ணன் அதைப் பற்றி சற்று ஆவேசத்துடன் கேட்டார். "நான் அப்படிச் சொல்லவே இல்லை. உங்களிடம் எப்போது அன்பும் மரியாதையும் உண்டு' என்று கூறி அவரது சந்தேகத்தைத் தெளிவுபடுத்தினேன்.  

என்னைப் பற்றி விசாரித்து பரிபூரணமாக உணர்ந்த அவர், "நீ அற்புதமாய் பாடுறே; இன்னும் நல்லா வருவே!' என என்னை வாழ்த்தினார். "இந்தத் துறையில் சிண்டு முடியறவங்க பல பேர் இருக்காங்க. அவர்களிடம் கவனமாக இரு' என உபதேசம் செய்து, என்னை அவர் காரில் வழியனுப்பி வைத்தார் என டி.ஆர்.மகாலிங்கம் கூற, சக நடிகர்களுக்கு அதன் பின்புதான் மூச்சே வந்தது.

(வி.கே.ராமசாமியின் "எனது கலைப்பயணம்' நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.