மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆரோக்கியமான வலிமையான எலும்புகளைப் பெற

"வைரஸ் தொற்றுக் காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மிகப் பெரிய சவால்' என்கிறார் "ஃபோர்டிஸ்' மலர் மருத்துவமனையின் விபத்து மற்றும் எலும்பு

News image
Updated On :6 செப்டம்பர் 2020, 12:30 am

DIN

"வைரஸ் தொற்றுக் காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மிகப் பெரிய சவால்' என்கிறார் "ஃபோர்டிஸ்' மலர் மருத்துவமனையின் விபத்து மற்றும் எலும்பு முறிவு பிரிவின் துறைத்தலைவர் நந்தகுமார் சுந்தரம்.

எலும்புகளை பலப்படுவத்துவது எப்படி? விளக்குகிறார் மருத்துவர்: 

""தினசரி உடற்பயிற்சி மற்றும் வைட்டமின் டி3 சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் மூலம் நம் எலும்புகளை பலப்படுத்திக் கொள்ளலாம்.

நமது உடல் அசைவுகள் சீராக இருப்பதற்கும், உடலமைப்பு நன்றாக இருப்பதற்கும் மட்டுமல்லாமல் நம்முடைய அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது நன்கு பராமரிக்கப்படுகின்ற வலுவான எலும்புகளே. ரத்தத்தை உற்பத்தி செய்வதும் இதுவே. நம் உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு சத்து மற்றும் இதர தாதுக்களின் அளவை சரியான முறையில் உறிஞ்சுவதும்,  தேவையான நேரங்களில் அவற்றை வெளியேற்றுவதும் எலும்புகளின் முக்கியமான வேலையாகும். நம் தசைகள், இருதயம் மற்றும் நரம்புகளுக்கு பலம் ஊட்டியாக இருப்பது சுண்ணாம்பு சத்து என்பது நாம் அறிந்ததே.எலும்பு பராமரிப்பில் நாம் உட்காரும் முறையும் தொடர்ச்சியான உடற்பயிற்சியும் பிரதானமாகக் கருதப்படுகிறது. தவறான முறையில் உட்காருவதால் எலும்புகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு அதனால் சில உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். தசை நார்கள் வலுவில்லாமல் போவதற்கும், தசை பிடிப்பு ஏற்பட்டு அதனால் கழுத்து மற்றும் முதுகு இறுக்கமாகிப் போவதற்கும் நம்முடைய தவறான உட்காரும் முறை தான் காரணமாக அமைகிறது. நம்முடைய எடையை எலும்புகளும், எலும்பு கூடும் இடங்களும் தாங்கிப் பிடிக்கும். ஆனால் இந்தத் தவறான உட்காரும் முறையால் எலும்புகளுக்குப் பதிலாகத் தசைநார்களும், தசைகளும் கடுமையான வலியால் பாதிக்கப்படும். உட்காரும்போதும், நிற்கும் போதும் எப்போதும் நேராக உடம்பை வைத்துக் கொள்ள வேண்டும்.

வேலையின் இடைஇடையே நம் தசைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்கான வாய்ப்பு நமக்கு அமைவதில்லை. உடம்பை அவ்வப்போது வளைத்தல், யோகா பயிற்சி அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறு நடைப்பயிற்சி போன்றவை மிகுந்த பலனை அளிக்கும். இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது அலுவலகப் பணியைச் செய்கிறார்கள். பணி செய்வதற்கான இடம் மிக முக்கியமானதாகும். அது போதுமான இடமாக இருக்க வேண்டும். அன்றாடம் நாம் படுக்கும் படுக்கையைப் பணி செய்வதற்காகப் பயன்படுத்தக்கூடாது. தசைநார்களும், தசைகளும் பாதிப்படைவதற்கு இதுவே காரணம். பிரத்யேகமாகப் பணிகள் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட நாற்காலி மற்றும் மேஜை வாங்குவது நல்லது. நாம் பயன்படுத்தும் கணினியின் திரை நம் கண்களுக்கு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்வதன் மூலம் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம். இதனால் முதுகுவலியும், கழுத்து வலியும் இருக்காது.

தடுப்பு மற்றும் காப்பு

எலும்பு காயங்களும், விபத்துகளும் அதிமாக வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தடுமாற்றமும், கண்பார்வையில் ஏற்படும் குறைபாடும் தான். நம் உடலில் கடினமானப் பகுதியாக எலும்பு இருப்பினும், முதியோர்களின் எலும்பு தேய்மானம் காரணமாக எலும்பு முறிவு ஏற்படுகிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சிலருக்கு சத்து குறைபாடு காரணமாக விளையாடும் போது எலும்பு முறிவு ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், மூத்த வயதில் உள்ள ஆண்களுக்கும் சுண்ணாம்பு சத்து குறைபாடு இருக்கும். சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும. தமிழ் மருத்துவத்தில் பிரண்டை என்று சொல்லக்கூடிய உணவை உட்கொள்ளுவதால், அதன் சத்து நன்கு உறிஞ்சப்பட்டு எலும்புப்புரை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

எலும்பு வலு பெற உடற்பயிற்சி கட்டாயமாகும். உடற்பயிற்சி தினசரி செய்வதால் எலும்புகள், தசைகள் மற்றும் தசைநார்கள் தூண்டப்படும். ஒருவருடைய வாழ்க்கை முறையில் ஒரு மணி நேரம், நீச்சல், ஓட்டப்பயிற்சி யோகா போன்ற ஏதாவது ஒரு பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்வது நலம்.

வைட்டமின் சத்து, பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவு உட்கொள்ளுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள், முட்டை, உலர் பழங்கள், கொட்டைகள், பால் சம்பந்தப்பட்ட உணவு மற்றும் கடல் சார் உணவு வகைகளை உண்பது சிறப்பு. வலிமையான எலும்புகளுக்கு சூரிய ஒளியில் தினசரி நிற்பது முக்கியமானதாகும். 

சரிவிகித உணவு மற்றும் அவரவர் குறைபாட்டிற்குத் தகுந்தபடியான தாதுக்கள் நிறைந்த உணவை, சிறு வயது முதற்கொண்டே குழந்தைகளுக்குக் கொடுப்பதால், அவர்களின் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்பு நோய், வில் போன்ற வளைந்த கால்கள், போன்றவற்றிலிருந்து  பாதுகாத்துக் கொள்ளலாம். 

இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்தும் பழக்கம் இருப்பதால், தண்ணீரில் இருக்கும் வைட்டமின் டி3 சத்து கிடைக்காமல் போகிறது. பூமியில் கிடைக்கும் நீரை காய்ச்சி குடிப்பதால் அதிலிருக்கும், தாதுக்கள் சத்துகள் நம் உடம்பிற்கு வலு சேர்க்கிறது. 

செயல்பாடு

எலும்புகளுக்குத் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மை உள்ளது. ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்பவர், மிகவும் கவனமாகவும், மிக துல்லியமாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எலும்பை சீரமைப்பதிலும், எலும்பு குறைபாடுகளைச் சரி செய்வது மட்டும் எலும்பு முறிவு மருத்துவர்களின் பிரதான பணியாகும். தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தினால், உயர் ரக சிகிச்சை முறைகளைக் கொண்டு எந்த வகை எலும்பு முறிவையும் சரி செய்துவிடலாம்.

ஒரு விபத்து நேர்ந்துவிட்டால், நேர்மறை எண்ணத்துடன் எலும்பு முறிவுக்கான சிகிச்சை பெற்று பழைய நிலைக்குத் திரும்புவது மிக முக்கியமாகும். நம் நேர்மறை அணுகுமுறைதான் நம்மை விரைவில் குணப்படுத்த உதவும். குடும்ப உறுப்பினரை மருத்துவமனையில் சேர்க்கும் பட்சத்தில், அந்த மருத்துவமனையில் நல்ல சுகாதாரம் உள்ளதா என்பதையும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

எலும்புப்புரை நோயினால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு சரி செய்யப்பட்டது. இந்தக் கடுமையான கால கட்டத்திலும் எங்களுடைய சிகிச்சையைத் தேடிவரும் நோயாளிகளுக்குத் தைரியத்துடனும் தன்னம்பிக்கையோடு சிகிச்சை அணிந்து அவர்களை காப்பாற்றி வெற்றி கண்டுள்ளோம் என்கிறார் மருத்துவர் நந்தகுமார் சுந்தரம். ''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.