மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மரம் நடும் நட்சத்திரங்கள்

"கிரீன் இந்தியா' அமைப்பின் சவாலை ஏற்று திரைப்பட நட்சத்திரங்கள் தங்களது வசிப்பிடத்தில் ஆளுக்கொரு மரங்களை நட்டு வருகிறார்கள்.

News image
Updated On :6 செப்டம்பர் 2020, 12:30 am

ஜெ

"கிரீன் இந்தியா' அமைப்பின் சவாலை ஏற்று திரைப்பட நட்சத்திரங்கள் தங்களது வசிப்பிடத்தில் ஆளுக்கொரு மரங்களை நட்டு வருகிறார்கள்.

Story image

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது 45-ஆவது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளார். வீட்டில் மரம் ஒன்றை நட்டு, கிரீன் இந்தியா சேலஞ்சில் தனது பங்களிப்பை உறுதிபடுத்தி உள்ளார். இதனை நடிகர் விஜய் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசனும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

"பசுமையான உலகத்தை நோக்கி மேலும் ஒரு படி நகருவோம்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய், மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். தான் மரக்கன்று நடும் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

Story image

இதே போன்று நடிகை சமந்தா தனது மாமனார் நாகார்ஜுனாவுடன் இணைந்து மரக்கன்று நட்டுள்ளனர். நடிகை ராஷி கன்னா, "கீத கோவிந்தம்' படத்தின் நாயகி ராஷ்மிகா ஆகியோரும் மரக்கன்று நட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.