இமான் இசையில் அனிருத்
ஜெயம் ரவி நடித்த "பூமி' படத்தில் ஜோடியாக நிதிஅகர்வால் நடித்துள்ளார். இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர்.


ஜெயம் ரவி நடித்த "பூமி' படத்தில் ஜோடியாக நிதிஅகர்வால் நடித்துள்ளார். இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். "பூமி" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்தார். பாடலின் விளம்பரம் இணையங்களில் வைரலாகி வந்தது. "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா?' என்ற இந்த பாடலின் சின்ன விடியோவையும் டி.இமான் வெளியிட்டார். தற்போது வெளியாகியுள்ள இந்த பாடலை பாடியது அனிருத் என்று தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்தின் அட்டகாசமான குரலில் இந்த பாடல் சூப்பர்ஹிட்டாகி உள்ளது. இந்த படத்தை இயக்குநர் லட்சுமண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ஜெயம் ரவி நடித்த "ரோமியோ ஜூலியட்' மற்றும் "போகன்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...