மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார்

"வல்லக்கோட்டை' ,"ராஜவம்சம்' , "கோடியில் ஒருவன்' உள்ளிட்ட  படங்களை தயாரித்துள்ள செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்து தயாரிக்கவுள்ள படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2021, 12:30 am

"வல்லக்கோட்டை' ,"ராஜவம்சம்' , "கோடியில் ஒருவன்' உள்ளிட்ட  படங்களை தயாரித்துள்ள செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்து தயாரிக்கவுள்ள படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை "கழுகு' படத்தை இயக்கிய சத்ய சிவா எழுதி இயக்குகிறார்.  இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்ரியா நடிக்கிறார். இவர்களுடன் விக்ராந்த் , துளசி , மதுசூதனன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்  ராஜா பட்டசார்ஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் கே எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் . கலை- இயக்கம் சி .உதயகுமார் , சண்டைப்பயிற்சி மகேஷ் .இப்படத்தின் தலைப்பு , படப்பிடிப்பு மற்றும்  இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.