"வனம்' படத்தின் மூலம் மற்றுமொரு வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் நடிகர் வெற்றி. "8 தோட்டாக்கள்', "ஜீ.வி', " கேர் ஆப் காதல்' போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த வேடங்கள் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருந்தது. இதைத் தொடர்ந்து இப்போது "வனம்' படத்திலும் தனது முத்திரையைப் பதிவு செய்திருக்கிறார். "மாநாடு', "ராஜவம்சம்' போன்ற பெரிய படங்களுடன் வெற்றி நடித்த "வனம்' படமும் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா விமர்சகர்களிடம் வரவேற்பு பெற்றள்ளது.
"வனம்' பட அனுபவம் குறித்து நடிகர் வெற்றி கூறும்போது..."வனம்' படத்தில் சிற்பக்கலை மாணவனாக நடித்தது புது அனுபவமாக இருந்தது. புகழ்பெற்ற கவின் கல்லூரியில் படப்பிடிப்பு நடந்தது. 1980-க்கு பிறகு அங்கு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிறப்பு அனுமதியுடன் எங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்றது. "வனம்' படம் பார்த்துவிட்டு பலரும் பாராட்டுகின்றனர். இந்த பெருமை எல்லாம் என்னுடைய இயக்குநர்களுக்குத்தான் போய் சேரும். என்னுடைய இயக்குநர்கள்தான் எல்லோரும் ரசிக்கும்விதமாக மக்கள் முன் என்னை கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். அந்த வகையில் ஒரு இயக்குநரின் நடிகராகவே என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன். பாலா, அமீர், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க விருப்பம். "மெமரீஸ்', "ஜோதி' ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. அத்துடன் "ஜீ.வி' இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன். இந்தப் படத்தை "மாநாடு' சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்'' என்றார் வெற்றி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரையில் நிறைவேற்றிய திட்டங்கள் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்

லோயா்கேம்ப் குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் தீ வைப்பு: மா்ம நபா் தலைமறைவு

ஒரே தொகுதியில் 4- ஆவது முறையாக களம் காணும் ஓ.பி.எஸ்.

ஒரே தொகுதியில் 5-ஆவது முறையாக களம் காணும் அமைச்சா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


