சைக்கிளில் சுற்றுலா!

கரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது ஒரு அம்சமாகிவிட்டது. கரோனா தாக்கம் குறைந்துவிட்டாலும் பெரும்பாலான கணினி நிறுவனங்கள், அலுவலர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் வேலை பார்ப்பவர்களுக்கு
சைக்கிளில் சுற்றுலா!
Updated on
1 min read

கரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது ஒரு அம்சமாகிவிட்டது. கரோனா தாக்கம் குறைந்துவிட்டாலும் பெரும்பாலான கணினி நிறுவனங்கள், அலுவலர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளம், அலுவலகத்தில் ஆகும் மின்சார செலவு, அலுவலர்கள் அலுவலகம் வந்து செல்ல ஆகும் போக்குவரத்து செலவு.. வாடகை போன்ற செலவுகள் குறைவதால் நிறுவனத்திற்கு லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது.

வீட்டிலிருந்து வேலை பார்த்து போர் அடித்த மூன்று நண்பர்கள், மும்பையிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் வந்து சென்றுள்ளனர்.. இந்தப் பயணத்தின் முக்கிய அம்சம் பயணத்திற்காக அலுவலகத்திலிருந்து விடுப்பு ஏதும் எடுக்கவில்லை என்பதுதான்..! அலுவலக வேலைகளை தினமும் பயண இடைவேளையில் செய்து முடித்துள்ளனர்.

ஜார்ஜ், ஆல்வின் ஜோசப், ரதிஷ், ஆகிய மூன்று நண்பர்கள் தங்கள் பயணத்திற்கு சைக்கிளிலிருந்து கொண்டு வேலை (ரஞதஓ ஊதஞங இவஇகஉ ) என்று பெயரிடவும் அவர்கள் மறக்கவில்லை.

பயணத்தைப் பற்றி ஜார்ஜ் கூறுவது:

""மும்பையைச் சேர்ந்த நாங்கள் கன்னியாகுமரியை அடைய 24 நாள்கள் தேவைப்பட்டது. நாங்கள் பயணித்த தூரம் 1687 கி.மீ தினமும் 80 கி. மீ சைக்கிள் பயணம். இந்தப் பயணத்தால் அலுவலக வேலை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று சொல்லி பயணத்திற்கு அனுமதி பெற்றோம். அது போல் அலுவலக வேலைக்கு எந்த பிரச்னையும் வராமல் உரிய நேரத்தில் செய்து முடித்த பிறகு பயணத்தை தொடர்ந்தோம்.

அதிகாலையில் 4 மணிக்கு பயணத்தைத் தொடங்கி காலை 11 மணிக்கு எங்காவது அமர இடம் தேடுவோம். அங்கே எங்கள் கணினி மூலம் தரப்படும் வேலைகளை செய்து முடிப்போம். வேலை முடிந்ததும் எங்கு விடுதி உள்ளதோ அங்கு சென்று தங்குவோம். அடுத்த நாள் அதிகாலை பயணம் மீண்டும் தொடங்கும். கணினிக்குத் தேவையான இணைய வசதி பெற வேண்டிய கருவிகளையும் கொண்டு சென்றிருந்தோம். இந்தப் பயணத்திற்காகப் புதிய சைக்கிள்களை வாங்கினோம். பயணத்தின் இடையே அவசர அலுவலக வேலை தரப்பட்டால் அதை முடித்துவிட்டுத்தான் பயணத்தைத் தொடருவோம்.

சென்ற நவம்பர் மாத இறுதியில் தொடங்கிய பயணம் டிசம்பர் 15-இல் கன்னியா
குமரியில் நிறைவானது. கன்னியாகுமரியில் சில நாள்கள் தங்கிவிட்டு, கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் மும்பை திரும்பினோம். ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் செலவானது. பல மாநில மக்கள், பலவித உணவுகள், எங்களுக்குப் புதிய அனுபவம்'' என்கிறார் ஜார்ஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com