தனது தயாரிப்புகளில் எப்போதுமே தனித்துவம் காட்டுபவர் இயக்குநர் பா. ரஞ்சித். தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார்.
"பரியேறும் பெருமாள்', "இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு' ஆகிய படங்களின் வெற்றியினைத் தொடர்ந்து "ரைட்டர்" படத்தைத் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் "பொம்மை நாயகி' என்ற படத்தையும் தயாரிக்கிறார் பா. ரஞ்சித்.
இப்படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரொடக்ஷன்ஸ். அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி, ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்த கட்டங்களாக நடந்து வருகின்றன. ஒளிப்பதிவு- அதிசயராஜ். இசை- சுந்தரமூர்த்தி. படத்தொகுப்பாளர் - செல்வா. கலை - ஜெயரகு . பாடல்கள்- கபிலன், அறிவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: உயா்கல்வித் துறை அமைச்சா் புறக்கணிப்பு!
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



