செவ்வாய் கிரகத்தில் தற்போது திரவ நீர் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு காணப்பட்டவை முதலில் ரேடார் சிக்னல்கள் என கணித்தார்கள். செவ்வாய் கிரக தென் துருவப் பிரேதசங்களில் காணப்பட்ட இந்தத் திரவ நீருக்கு "சவுத் போலார் லேயர்டு டெபாசிட்ஸ்'
என்றும் பெயரிடப்பட்டிருந்தது. இதன் மூலம், இந்த மேற்பரப்பில் காணப்படும் திரவம் போன்ற நீர், உண்மையில் ஏரிகளாக இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2018 - ஆம் ஆண்டில் இரண்டு ஆராய்ச்சி குழுக்கள், மார்ஸ் எக்ஸ்பிரஸ் சுற்றுப்பாதையில் இருந்த தரவுகளைப் பயன்படுத்தி ஆச்சரியமான கண்டுபிடிப்பை அறிவித்தன.
இந்த சிவப்பு கிரகம் தென் துருவத்திலிருந்து ரேடார் கருவியின் சிக்னல்களை பிரபதிபலிக்கின்றன. இந்த பிரதிபலிப்பின் மூலம், கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு திரவ நிலையில் ஏரியின் மேற்பரப்பு இருப்பதாக வெளிப்படுத்துகின்றன.
இருப்பினும், ஹரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் தரவை தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த பரந்த தொகுப்பின் ஆய்வு, தென் துருவத்தைச் சுற்றி, ஒரே மாதிரியான டஜன் கணக்கான ரேடார் பிரதிபலிப்புகளைக் கண்டறிந்தது.
""ஏதேனும் ஒரு பொருளின் ஊடாக ரேடார் பயணிக்கும் போது அதன் ஆற்றலை இழக்கின்றது. எனவே, அதன் ஆழமான பரப்பிலிருந்து மேலே வரும் பிரதிபலிப்புகள், மேற்பரப்பில் இருந்து வரும் பிரதிபலிப்பை விட பிரகாசம் குறைவாக இருக்க வேண்டும்'' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
""நிலத்தடியில் இருந்து வரும் பிரதிபலிப்புகள் வழக்கத்துக்கு மாறாக பிரகாசமாக இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. இந்த பிரகாசமான பிரதிபலிப்புக்கு, திரவ நீர் தான் காரணம், ஏனென்றால், ரேடாரில் திரவம் கூடுதல் ஒளிர்வுடன் காணப்பட்டது என்று இந்த இரண்டு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்தன'' என்றும் கூறினார்.
""இந்த சிக்னல்கள் திரவ நீரா அல்லது வேறு என்னவென்று எங்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால், முதலில் கண்டறியப்பட்டதை விட, தற்போது மேலும் பரவலாகக் காணப்படுகிறது'' என்று ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகத்திலிருந்து, ஜெஃப்ரி ப்ளாட் கூறினார்.
செவ்வாய் கிரகத்தின் தென் துருவம் முழுவதும் திரவ நீர் இருக்கலாம் அல்லது, இந்த சிக்னல்கள் வேறு எதையோ தெரிவிக்கின்றன என்று ப்ளாட் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாகன சோதனையில் ரூ. 65,200 பறிமுதல்

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


