விஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கேமரா எரர்'.
சுதிர், பிரபாகரன், ஹரிணி, சிம்ரன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் அகரன். உண்மைச் சம்பவங்களை படமாக எடுக்க படக்குழுவினர் ஒரு மலை கிராமத்திற்கு செல்கின்றனர். தினமும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஆனால் ஒவ்வொரு நாளும் படக்குழுவினரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சந்தேகத்துடன் கவனிக்கையில் அங்கே இறந்துபோனவர்களின் ஆவிகள் இவர்களுடன் கலந்துவிடுகின்றனர். பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் படக்குழுவினர் ஆவிகளிடம் இருந்து தப்பித்தார்களா? படப்பிடிப்பை முடித்தார்களா? என்று பரபரப்பாக சொல்லுவதே களம். படப்பிடிப்பில் இயக்குநர் காட்சியை விளக்கிவிட்டு ஆக்ஷன் என்றதும் அக்காட்சியில் நடிப்பவர்களே யோசித்து வைத்த வசனத்தை சொல்லி நடிக்க வேண்டும். இப்படித்தான் படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளனர் இயக்குநர் அகரன் இப்படத்தில் வெற்றிக்கரமாக முடித்துள்ளார். ஒளிப்பதிவு - பாலாஜி எஸ்.பி. இசை - ஷரவன் கலை. தயாரிப்பு - துபாய் மிஸ்ரா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



