மீண்டும் கூட்டணி

1980 மற்றும் 90-களில் "மக்கள் நாயகன்" என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்.  கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது எதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர்.
மீண்டும் கூட்டணி
Updated on
1 min read


1980 மற்றும் 90-களில் "மக்கள் நாயகன்" என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்.  கிராமிய மணம் சார்ந்த படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களின் மனதை தனது எதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர்.  இந்த 45 வருடங்களில் தான் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்துள்ள பெருமை கொண்ட ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு "சாமானியன்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

உடன் நடிகர் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் நடிக்கின்றனர்.  "தம்பிக்கோட்டை', "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' உள்ளிட்ட படங்களை இயக்கிய த. ராகேஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.  எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் இந்த படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். எஹப்போதுமே ராமராஜனையும் இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது.  ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து, அவரது வெற்றிக்கு துணைநின்று காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளார் ராஜா.  இன்னும் சொல்லப்போனால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக பல வெற்றிப் பாடல்களை ராமராஜனுக்கு இசைத்துள்ளார் இளையராஜா. தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிப்பிற்குத் திரும்பியுள்ள ராமராஜனின் படத்திற்கு இளையராஜா ஒப்பந்தமாகி இருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 

ராமராஜனின் பல வெற்றிப்படங்களை இயக்கிய அவரது திரையுலக பயணத்திற்கு உறுதுணையாக நின்றவர் இயக்குநர் கங்கை அமரன். அவர் மூலமாக இளையராஜாவை அணுகி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராமராஜன். படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ராமராஜன். இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com