பாலியல் வன்முறைக்கு புது சட்டம்
எஸ். ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மெய்ப்பட செய்'. அறிமுக இயக்குநர் வேலன் எழுதி இயக்கியுள்ளார்.


எஸ். ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மெய்ப்பட செய்'. அறிமுக இயக்குநர் வேலன் எழுதி இயக்கியுள்ளார். ஆதவ் பாலாஜி, மதுனிகா, ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ.ஏ.கே.சுந்தர், பெஞ்சமின், ஞான பிரகாசம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும்போது....
"ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம்.
ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனிதர்களாக ஆகிறோம் என்பது நம்பிக்கை.
பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம்.
பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். பெண்களுக்கு எதிராக சமீபமாக அரங்கேற்றப்பட்டு வரும் பாலியல் தொந்தரவு, அதை களைவதற்கான புதிய சட்ட வடிவுகள் என கதை புது கோணத்தில் இருக்கும்'' என்றார் இயக்குநர். வரும் 15-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...