நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

18 ஆண்டுகளுக்குப் பின்....

பிஜாய் மேனன் என்கிற தன் பெயரை சினிமாவுக்காக மாற்றிக் கொண்டுள்ளார் வீரேந்திரன்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:30 pm

DIN


பிஜாய் மேனன் என்கிற தன் பெயரை சினிமாவுக்காக மாற்றிக் கொண்டுள்ளார் வீரேந்திரன்.

ஒரு  சிறிய தொழில் நடத்தி வந்தவர், சத்யஜோதி தியாகராஜன் அழைப்பின்பேரில் நடிகர்களுக்கான தேர்வில் கலந்துகொண்டார். சத்யஜோதியின் "பார்த்திபன் கனவு' படத்திலும் "காக்க காக்க' படத்திலும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதன் பிறகு வர்ணஜாலம், எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கனவு மெய்ப்பட வேண்டும். ரிமோட் , சதுரங்கம் போன்ற  16 படங்களில் நடித்தார். இதில் பல படங்கள் வெற்றிப் படங்கள். சன் டிவியின் ஆனந்தம் மற்றும் சிதம்பர ரகசியம் போன்ற தொடர்களில் நடித்தவர் விஜய் டி.வி.யில் தொடர்களிலும் நடித்துள்ளார். 

இவர் நடித்த படங்களின்  வெற்றிக்குப்பின் பல பட வாய்ப்புகள் வந்தன. இப்படி நடித்தவர் பிள்ளைகள் முன்னேற்றம் சார்ந்த குடும்ப சூழல் காரணமாக ஆஸ்திரேலிய நாட்டுக்குப் போய் 18 ஆண்டுகள் இருந்து, தன் கடமைகளை முடித்து வந்தவர்,  தனது உள்ளத்தில் உறங்கிக்கிடந்த கனவைப் புதுப்பித்துக் கொள்ளும் முகமாக மீண்டும் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். இப்போது "இயல்வது கரவேல்', "வேதா' மற்றும் கன்னடத்தில் ஷமந்த் எனப் புதிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.