வயிற்றுப் பிரச்னைகளை தீர்க்க வழி !

"அதிகப்படியான காரம் வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்'' என்கிறார் சென்னை அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் இரைப்பை குடலியல் மூத்த மருத்துவர் ஆதித்ய ஷா.
வயிற்றுப் பிரச்னைகளை தீர்க்க வழி !
Published on
Updated on
2 min read

"அதிகப்படியான காரம் வயிற்றுப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்'' என்கிறார் சென்னை அப்போலோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் இரைப்பை குடலியல் மூத்த மருத்துவர் ஆதித்ய ஷா, இப்போது பெரும்பாலானோருக்கு வயிற்று நோய் பிரச்னைகள் அதிகமாகி வருகின்றன.  துரித உணவுகள் சாப்பிடுவதும் ஓர் காரணம். இந்த நிலையில், வயிற்றுப் பிரச்னைகளுக்கான காரணம் குறித்து,  மருத்துவர் ஆதித்ய ஷாவிடம் ஓர் சந்திப்பு:

வயிற்று பிரச்னைக்கு காரணம் என்ன?

உணவுப் பிரியர்கள்-  காரமான உணவுப் பிரியர்களே, காரமான உணவு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.  அதிக காரமான உணவை உண்பதால் உடலில் உஷ்ணம் ஏற்படும்.  மிளகாய்,  மிளகு, கறிமசாலா கலவைகள்- இந்த வகையில் ஆபத்தானவை. கேப்சைசின் என்ற வேதிப்பொருள் மிளகாய்க்கு காரத்தைத் தருகிறது, அமிலங்களின் கலவையையும் கொண்டுள்ளது. மிளகாயை அதிக அளவில் உட்கொள்ளும்போது வயிற்றின் உட்சவ்வுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தும்.

காரமான உணவுப் பலரை கவர்ந்திழுக்கும். ஆனால், அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அது பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒருவர் வெறும் வயிற்றில் அதிக அளவு மசாலாப் பொருள்களைச் சாப்பிட்டால், அது அமிலத்தன்மை கொண்ட குடலை ஏற்படுத்திவிடும். இது வாயு - நெஞ்செரிச்சல் வடிவில் அசெளகரியத்துக்கு வழிவகுக்கும். தினசரி உணவில் காரமான உணவை உட்கொள்பவர்கள், தங்கள் நாக்கின் சுவை மொட்டுகளில் மசாலா சுவையை அதிக அளவில் உணர்ந்துகொண்டே இருப்பதால், உணவில் உள்ள மற்ற சுவைகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. சுவையை வேறுபடுத்தி உணரும் தன்மை இழக்கப்படும். காரமான உணவை உட்கொள்வது ஏற்கெனவே இருக்கும் வயிற்றுப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும். வாந்தி, வாய் புண்கள், ஆசனவாய் பிரச்னைகள், நெஞ்செரிச்சல் அல்லது இரைப்பை உணவுக்குழாய் எதிர்க்களித்தல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

காரமான உணவுடன் தொடர்புடைய பொதுவான பிரச்னைகள் என்ன?

இரிடபிள் பவல் சிண்ட்ரோம் என்பது ஒரு பொதுவான கோளாறு ஆகும். இது வயிறு, குடல் பகுதிகளைப் பாதிக்கிறது. இது செரிமான மண்டலங்களின் இயக்கத்தைத் தொந்தரவு செய்கிறது. காரமான உணவுகளை உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது, வாரத்திற்கு 10 முறைக்கு மேல் காரமான உணவுகளை உட்கொள்வதால் இரிடபிள் பவல் சிண்ட்ரோம் வருவதற்கான வாய்ப்பு 92 சதவீதம் அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

பெப்டிக் அல்சர் என்பது காரமான உணவுகள் அல்சரை உண்டாக்காது, ஆனால் ஏற்கெனவே அல்சரால் பாதிக்கப்பட்டவர்களின் அசெளகரியத்தை அதிகரிக்கும். அவை வயிற்றின் உட்புறம், சிறுகுடலின் மேல் பகுதியில் உருவாகும் திறந்த புண்களாக இருக்கும்.

இரைப்பை அழற்சி என்பது இரைப்பை அழற்சி வயிற்று உட்சவ்வுப் பகுதியைக் காயப்படுத்துகிறது. காரமான உணவுகளை அதிகம் உட்கொள்வதால் வயிற்றில் சிவத்தல், வீக்கம் ஏற்படுகிறது. இது அல்சர், இரைப்பை பாலிப்கள், வயிற்றில் கட்டிகள் போன்ற பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
இரைப்பை உணவுக்குழாய் எதிர்க்களித்தல் நோயானது நிறைய காரமான உணவுகளை உட்கொண்ட பிறகு பலர் அமில எதிர்க்களிப்புக்கு ஆளாகிறார்கள். வயிற்றையும் வாயையும் இணைக்கும் குழாயில் வயிற்று அமிலம் மீண்டும் மீண்டும் பாயும்போது எஉதஈ ஏற்படுகிறது. இது நெஞ்செரிச்சல், நெஞ்சு வலி, தொண்டையில் கட்டி போன்ற உணர்வு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

நோய் தீர என்ன வழி?

வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும். அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து, முறையாகப் பயன்படுத்தினால், காரமான உணவுகளை ஒருவர் அனுபவித்து சாப்பிட முடியும். ஒருவருக்கு ஏற்கெனவே சில வயிற்றுப் பிரச்னைகள் இருந்தால், முன்கூட்டியே நோயறிதல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிக முக்கியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com