ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தமிழுக்கு வரும் ஹிந்தி இயக்குநர்

எண்டேமால் ஷைன் இந்தியா -  நட்மெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் "மாணிக்'. ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

News image
Updated On :13 நவம்பர் 2022, 12:18 pm

எண்டேமால் ஷைன் இந்தியா -  நட்மெக் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் "மாணிக்'. ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஹிந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில், உளவியல் த்ரில்லர் பாணி கதையாக தயாராகிறது. ஹிந்தியில் வெளியான "லுடோ', "ஜக்கா ஜாசூஸ்' மற்றும் "சத்ரசல்' ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவர்த்தி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் சம்யுக்தா சண்முகநாதன்,  விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி  உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தியா முழுவதும் தற்பொழுது சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணி கதைகளுக்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த பாணியில் இந்த திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பற்றி எண்டேமால் ஷைன் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ரிஷி நேகி பேசுகையில், ""திறமையான இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தியின் இயக்கத்திலும், நட்சத்திர நடிகர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பிலும் "மாணிக்' படத்தின் உயிரோட்டமான கதைக்களத்தை பார்வையாளர்களுக்கு சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம். இயக்குநர் சாம்ராட் சக்கரவர்த்தி இந்த கதையை சொன்ன போது, நாங்கள் இதன் தயாரிப்பில் உற்சாகமாக களமிறங்கினோம். திறமையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படக்குழுவில் இணைந்திருப்பதால், இந்தப் படம் தரமான படைப்பாக உருவாகும். இதனை நாங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.'' என்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்
பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.