தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காசியில் நடக்கும் காதல் கதை

"கே.ஜி.எஃப்', "கே..ஜி..எஃப் 2', "777' சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப்படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்து வருகிறது.

News image
Updated On :9 அக்டோபர் 2022, 12:30 am

DIN

"கே.ஜி.எஃப்', "கே..ஜி..எஃப் 2', "777' சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப்படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் "பனாரஸ்'. "பியூட்டிஃபுல் மனசுகுலு','பெல்பாட்டம்' ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கியுள்ள இப்படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை அத்வைதா குருமூர்த்தி கவனிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெயிலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரன் பேசும் போது... "" இந்த பனாரஸ் படம் மாபெரும் வெற்றிபெறும் என்பது இப்படத்தின் ட்ரெயிலரைப் பார்த்தாலே தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன் என்றார். 
இயக்குநர் ஜெயதீர்த்தா பேசும்போது, இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் புது ஜானர் கதைகளைத்தான் எடுத்து வந்துள்ளேன். இந்த "பனாரஸ்' படமும் அப்படிப்பட்ட முற்றிலும் ஒரு ஜானர் வகையறா படம்தான். இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளி வந்துள்ளோம். இதுவொரு யுனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.