மூளை என்ற உறுப்பு இல்லை எனில் மனிதர்கள் முடங்கி விடுவார்கள். அபாரத் திறமை படைத்தது மூளை.
வயதாக, வயதாக மறதியும் ஒன்றாக ஆகிவிடும் . தற்போது மறதி நோய் பரவலாக உள்ளது. மூளை நலமாக இருக்க, செய்ய வேண்டியவை என்னென்ன?
ஒமேகா சத்துகள் அடங்கிய மீன் வகைகளைச் சாப்பிடுவது மூளையின் செயல்பாடுகளுக்கு மிக அவசியமாகும். பொதுவாக, கடல் உணவுகளானது கொழுப்பு குறைந்ததோடு, வலிமையானதும் கூட!
வைட்டமின் 'இ' அதிகம் உள்ள பருப்புகள், விதைகள் மற்றும் வால்நட், பாதாம், முந்திரி, சூரியகாந்தி, எள் விதைகள் ஆகியன தினமும் தேவையான அளவு சாப்பிடலாம்.
முக்கியமாக, முந்திரியை ஒரு நாளைக்கு ஐந்து என குறைவாகச் சாப்பிடவேண்டும். கொழுப்பைத் தவிர்க்க, வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
கோதுமை, கருப்பு , பிரவுன் அரிசி ஆகியன இதய நோய்க்கு நல்லது. இதயம் சுறுசுறுப்பாக இயங்குவதால், ரத்தம் சீராகப் பாயும். அது மூளைக்கும் அவசியம் .
மாதுளைப் பழங்களும் அப்படியே சாப்பிடலாம் அல்லது பழச்சாறாகவும் உட்கொள்ளலாம். பழச்சாறில் பால், சர்க்கரை கலக்காமல் சாப்பிடுவது நல்லது. பாதிப்பு அடைந்த நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தும் .
காய்கறிகளில் பீன்ஸ் மிகவும் நல்லது. பீன்ஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். வெண்டைக்காய், முருங்கை , காலிஃபிளவர் எனப் பல சத்துகள் உள்ளன.
தேயிலைகளால் நன்றாகப் பக்குவப்படுத்திய 'டீ' மிக நல்லது, நன்றாகத் தலைவலிக்கும்போது, மாத்திரை எல்லாம் உள்கொள்ளாமல் ஒரு கருப்பு தேநீர் லேசாக எலுமிச்சை துளி கலந்து நாட்டு சர்க்கரையோடு பருகினால் சில நிமிடங்களில் கடுமையான தலைவலியும் போய்விடும் . ஆப்பிள் சாப்பிட்டால் கூட, தலைவலி குணமாகும். காபிகூட நல்லதுதான்!
வாதம், பித்தம், கபம் ஆகிய வாயு, சூடு, குளிர்ச்சி ஆகிய மூன்றும் சமமாக இருந்தால் மருந்துக்கு வேலை இல்லை. ஆரோக்கியமாகவே பல்லாண்டு வாழலாம்.
கருப்பு சாக்லேட் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டது. 'எண்டோபிரின்ஸ்' எனப்படும் சாந்தத்தை மூளைக்குத் தர வல்லது. சோயா பீன்ஸ் , பூசணி விதைகள், விதை எடுக்கப்பட்ட தக்காளி, முட்டைஆகியன சாப்பிடுவது நன்மை தரும்.
கொழுப்பு பிரச்னை உள்ளவர்கள் மஞ்சள் தவிர்த்து வெண் கருமுட்டை ஒருநாளைக்கு இரண்டு கூட சாப்பிடலாம். எண்ணெய் குறைவாக ஊற்றிக் கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வெண் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வெண் சுத்திகரிக்கப்பட்ட உப்பு ஆகியவற்றைத் தவித்து, நாட்டு சர்க்கரை, நாட்டு உப்பு, அல்லது இந்துப்புகளை உபயோகிக்க வேண்டும்.
மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சியானது மூளைத் திறனுக்கு மிக முக்கியம். ஒருநாளைக்கு குறைந்தது பத்து நிமிடமாவது நல்ல உடற்பயிற்சிகளில் சிறப்பானவற்றை செய்ய வேண்டும். மார்புப் பகுதியின் உடலாவது வேர்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி

கன்னியாகுமரியை தக்கவைத்தது அதிமுக

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

திண்டிவனம் தொகுதியில் விசிகவைச் சோ்ந்த வன்னிஅரசு வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


