சுத்தமான காற்று..! 

உலகிலேயே மிகவும் தூய்மையான காற்று உள்ள பகுதி "கேப் கிரிம்'.   இந்த பகுதியை "புவியின் சொர்க்கம்' என்று அறிவியலாளர்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
சுத்தமான காற்று..! 
Published on
Updated on
1 min read

உலகிலேயே மிகவும் தூய்மையான காற்று உள்ள பகுதி "கேப் கிரிம்'. இந்த பகுதியை "புவியின் சொர்க்கம்' என்று அறிவியலாளர்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

மனிதர்கள் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் நிறைந்த காற்று அடிப்படையான விஷயம்தான். ஆகவே, எதிர்காலத் தலைமுறைக்குத் தூய்மையான சுவாசக் காற்றை விட்டு செல்வது என்பது நமது கடமை.

தண்ணீர், உணவு இன்றி உயிரினங்களால் நீண்ட நாள்கள் வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் 3 நிமிடத்துக்கு மேல் தாக்கு பிடிப்பது கடினமாகும். அந்த ஆக்ஸிஜன் நிறைந்த காற்றுதான் புவியையும் பால்வெளி அண்டத்தில் உள்ள மற்ற கோள்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.

புவியில் சுத்தமான காற்றைத் தேடுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதுடன், தூய்மையான காற்று நிறைந்த பகுதிகளை அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உலகமயமாதல், மனிதர்களின் நடவடிக்கை, தொழில்பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் உலகிலேயே அதிக தூய்மையான இயற்கை காற்று நிறைந்த பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "கேப் கிரிம்' என்று அழைக்கப்படும் இந்தத் தீபகற்பப் பகுதியானது ஆஸ்திரேலியா தீவான டாஸ்மேனியாவின் வடமேற்கு முனையில் உள்ளது.

"உலகின் விளிம்பு' என்று பிரபலமாக அறியப்படும் கேப் கிரிமுக்கு மிகக் குறைவானவர்களைச் சென்றுள்ளனர். காற்றின் தரத்தை அளவிடும் ஒரு நிலையம் இங்கு அமைக்கப்பட்டு, புவியிலேயே இந்த பகுதியில் தான் மிகவும் சுத்தமான காற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவிலிருந்து மாசு அடையாத காற்றை எடுத்துச் செல்லக் கூடிய , மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசக் கூடிய பயங்கரமான காற்றுக்கு இப்பகுதி பிரபலமானது. ஹவாய் தீவில் உள்ள மெளன லோவா நிலையம், மக்குவாரி தீவு அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் உள்ளிட்டவற்றிலும் தூய்மை நிறைந்த இயற்கை காற்று உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com