ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

குணச்சித்திர நடிப்புக்கு புது வரவு!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு  வித்தியாசமான தோற்றமுள்ளவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.  

News image
Updated On :21 மே 2023, 11:19 am

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு  வித்தியாசமான தோற்றமுள்ளவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.  ஏற்கெனவே இருக்கும் நடிகர்கள் தங்களின்  சம்பளம் உள்பட இன்னும்  சில விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதால்  எல்லா படங்களிலும் அவர்களைப் பயன்படுத்துவது இயலாத காரியமாக இருக்கிறது. இந்த நிலையில்  நடிகர் முத்துப்பாண்டி  சமீப சினிமாக்களில் கவனம் தொட்டிருக்கிறார். 

"அயலி', "குலசாமி' போன்ற படங்களில்  இவரது நடிப்பிற்கு பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்'  படத்தில்  சீமான் போன்று பேசி  நடித்து அவரிடமே பாராட்டைப் பெற்றவர் முத்துப்பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர் பல்வேறு கம்பெனிகளில் ஏறி இறங்கி வாய்ப்புத் தேடினார். முதல் வேலையாக தயாரிப்பு நிர்வாகத்திற்கும் உதவியாக இருந்ததால் இவருக்கு எளிதாக பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

பெரிய அதிர்ஷ்டம் எனக்கும். எங்கெங்கோ கிராமங்களில் இருந்து சினிமா, மீடியா, இலக்கியம், அரசியல் என லட்சியங்களோடு சென்னைக்கு கிளம்பி வந்தவர்களில் நானும் ஒருவன். நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது போல், சினிமாவே அமைந்து விட்டது.  என்னை கவனிப்பவர்கள் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கிறார்கள். அதை பூர்த்தி செய்தே ஆக வேண்டும்.நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும்.  நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்'' என்கிறார் முத்துப்பாண்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.