1967-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி காலையில் கண்ணதாசன் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'விமானத்தில் மதுரை வரப் போகிறேன்'' என்றார்.
"என்ன? ஏது?' என்று புரியாமல் விமான நிலையத்துக்குச் சென்று கண்ணதாசனை பழ.நெடுமாறன் அழைத்து வந்தார். அப்போது, சிவகாசியில் உள்ள தனது நண்பர் இராஜதுரையைச் சந்திக்க வந்திருப்பதாக கண்ணதாசன் கூறினார்.
பின்னர், பழ.நெடுமாறனின் இல்லத்துக்குச் சென்றதும் கண்ணதாசன் தனது பெட்டியைத் திறந்து, அழகான அட்லாஸ் புத்தகத்தை எடுத்துத் தந்தார். ' என்ன இது? திடீர் பரிசு.'' என்று நெடுமாறன் கேட்டார்.
'ரீடர்ஸ் டைஜெஸ்ட் ஏஜென்ட் ஒருவர் என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு போனார். நேற்று அஞ்சலில் இது வந்தது. இதைப் பார்த்தும் உங்கள் நினைவுதான் வந்தது. உங்களுக்குதான் இது பயனுள்ளதாக இருக்கும் என எடுத்து வந்தேன்'' என்றார் கண்ணதாசன்.
ஜெயகாந்தனின் தனித்துவம்: வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர் ஜெயகாந்தனின் தனக்கே உரிய பாணியில் கூறியிருப்பதாவது:
'கணவன்- மனைவிக்கு இடையே தனித்தனி அந்தரங்கம் அவசியமா? இல்லையா? என்பது பிரச்னை இல்லை. இருந்தால் அதை கௌரவிக்க வேண்டும் என்பதே நாகரிகம். இருக்கும் என்று எதிர்பார்த்து அதைக் கௌரவித்து எல்லை வகுத்துக் கொண்டு வாழ்வதில் நஷ்டம் இல்லை. மாறாக, இருவருக்கும் தனித்தனி அந்தரங்கள் ஏதுமில்லை என்று பொய்யை போர்வையில் புகுத்திக் கொண்டு அது பொய் என்று பரஸ்பரம் ஒவ்வொருவரின் அந்தராத்மாவிற்கும் புரிவதால், வாழ்க்கை முழுவதும் ஊனமாகிப் போவதையே பெரும்பாலும் சந்திக்கிறோம்.
பிரசாரம் இல்லாத இலக்கியமே கிடையாது. பிரசாரங்களும் இலக்கியமாவதுண்டு. இலக்கியங்களும் பிரசாரம் ஆவதுண்டு. முன்னது சிறப்பு. பின்னது வீழ்ச்சி. ஆழ்ந்த ஞானம் இலக்கியத்துக்குப் புறம்பானதல்ல. கலைஞன் ஒரு பிராசரகனே! கலைஞன் பிரசாரம் செய்தால் அவன் பிரசாரத்தை ஏற்றுகொள்ள முடியாதவர்கள் கூட அவனை விட்டுப் போக முடியாது.
என் ரிஷிமூலம் கதைக்கு வந்த எதிர்ப்பு மரபு சம்பந்தப்பட்டது இல்லை. அது "டாப்பூ (டிஏபிஏஓ)' சம்பந்தப்பட்டது. நம் மரபுப்படி, பார்த்தால் இது மாதிரி கதைகள் உண்டு. எல்லா மரபு இதிகாசங்களிலும் உண்டு. புராதன, இந்திய, கிரேக்க இதிகாசங்களிலும், நவீன இலக்கியங்களிலும் இது மாதிரி பிரச்னைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று யாருமே சொன்னதில்லை. எந்த மரபும் அறியாதவர்கள் தங்களுடைய பாமரத்தனமான மனக்கூச்சத்தால் காட்டிய எதிர்ப்பே ரிஷிமூலத்துக்கு அதிகம் வந்தது. "டாபோ' என்பது அறியவும், அணுகவும் தகாது என்று சமூகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்டதாகும். எனவே, அறிவாளிகளுக்கு செய்யப்பட்டதாகும். எனவே அறிவாளிகளுக்கு எப்பொழுதுமே "சோஷியல் டாப்பூ' என்பது ஒரு பிரச்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


