மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஃபிலிம்பேர் விருதுகளை குவித்த சித்தா

தென்னிந்திய மொழிகளுக்கான 69-ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன.

News image

சித்தார்த்

Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:30 pm

தென்னிந்திய மொழிகளுக்கான 69-ஆவது ஃபிலிம்பேர் விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. அருண்குமார் இயக்கிய "சித்தா' மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களும் விருதுகளை குவித்துள்ளன. சிறந்த படத்துக்கான விருதை சித்தா படம் வென்றுள்ளது. சித்தார்த் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை சித்தா படத்தின் கண்கள் ஏதோ பாடலை பாடிய கார்த்திகா வைத்தியநாதன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது சித்தா பட நாயகி நிமிஷா சஜயனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருதை சித்தா படத்தில் நடித்த அஞ்சலி நாயர் வென்றார். சிறந்த இயக்குநருக்கான விருதை சித்தா பட இயக்குநர் அருண்குமார் வென்றுள்ளார். சிறந்த இசை ஆல்பத்திற்கான விருதும் சித்தா படத்துக்குதான் கிடைத்தது. சந்தோஷ் நாராயணன் மற்றும் திபு நினன் தாமஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பொன்னியின் செல்வன் படத்துக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மணிரத்னம் இயக்கிய சரித்திர படமான பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகத்துக்கு 4 ஃபிலிம்பேர் விருதுகள் கிடைத்தன. ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. சின்னஞ்சிறு கிளியே பாடலை பாடிய ஹரிசரணுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த புரொடக்ஷன் டிசைன் விருது கலை இயக்குநர் தோட்டா தரணி வென்றார்.சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ரவிவர்மனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடலாசிரியர் விருது பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.