
சக்கரவர்த்தி
'பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் விளையாட்டு கிராமத்தில் குளிர்சாதன வசதி இல்லை. வெப்பம் அதிகமாக உள்ளதால், கிராமத்தைவிட்டு வெளியேறி வசதியான விடுதிகளில் வீரர்கள் பலர் தங்கியுள்ளனர். நான் பொதுவாக வீட்டில் இருக்கும்போது மதிய வேளையில்தான் உறங்குவேன். போதுமான வசதி செய்து தரப்படாத நிலையில் வெப்பத்தில் என்னால் உறங்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல் பூங்காவின் புல் தரையில் படுத்து உறங்கினேன்'' என்கிறார் தாமஸ் ஸீகன்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஆடவருக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் "பேக் ஸ்ட்ரோக்' பிரிவில் இத்தாலிய வீரர் தாமஸ் ஸீகன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டு கிராமத்தில் தங்க போதிய குளுமை வசதி இல்லாததை விமர்சித்து பாரிஸ் நகரத்தில் உள்ள பூங்காவில் உலர்ந்த இலைகள் உதிர்ந்து கிடைக்கும் புல்தரையில் தாமஸ் ஸீகன் படுத்து தூங்கி தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார். இதை வீடியோ எடுத்த சவூதி அரேபியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஹுஸைன், தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு செய்ய அது வைரலானது. இதன்பின்னரும் நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், "தங்கப் பதக்கம் பெற்றவருக்கே இந்த கதியா?' என்று ஊடகங்களும் எழுதுகின்றன.
"குளிர்சாதனக் கருவிகள் மூலம் கார்பன் வாயு காற்றில் கலக்கிறது என்பதால் காற்றில் மாசு அதிகமாகாமல் தடுக்க ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் ஏ.சி. வசதி செய்யப்படவில்லை' என்கின்றனர் போட்டிக் குழுவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.