இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மழை பிடிக்காத மனிதன். விஜய் மில்டன் கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் விஜய் மில்டன் பேசும் போது... ""தனஞ்செயன் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும்தான் இந்தப் படம் தொடங்க முக்கிய காரணம். விஜய் ஆண்டனியை ஹீரோவாக நான் தான் அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஆனால், அது மிஸ் ஆகிவிட்டது.
நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். "மழை பிடிக்காத மனிதன்' வெறும் ஆக்ஷன் படம் மட்டும் கிடையாது. அது பொயட்டிக் ஆக்ஷன் ஜானர். இந்த வார்த்தையை தனஞ்செயன்தான் சொன்னார். என்னுடைய எல்லாப் படங்களிலும் கெட்டவன் சாகக் கூடாது. கெட்ட விஷயம்தான் சாக வேண்டும் என்று சொல்வேன். அது இந்தப் படத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். அந்தமான், டையூ என பல இடங்களில் இதுவரை படப்பிடிப்பு நடக்காத இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.
படப்பிடிப்புத் தளங்களை போராடி எங்களுக்கு தனஞ்செயன்தான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் போன்ற திறமையான நடிகரைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அசத்தினார். சரத்குமாரிடம் நல்ல தலைமை பண்பு இருக்கும். "சூர்யவம்சம்' காலத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். கதை கேட்டதும் உடனே சம்மதம் தந்து விட்டார். படத்தை நினைத்த நேரத்தில் உருவாக்க துணையாக நின்ற படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி'' என்றார் விஜய் மில்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உதகையில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது
பூக்கி - விஜய் ஆண்டனி வேண்டுகோள்!
கோலிவுட் ஸ்டூடியோ!
உறவின் மகத்துவம்
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

