முந்நூறு ஆண்டுகள் தேர்தல் வரலாறு கொண்ட அமெரிக்காவுக்கு 'முதல் பெண் அதிபர் கிடைப்பாரா?' என்ற எதிர்பார்ப்புக்கு 'கிடைக்க மாட்டார்' என்ற பதிலை டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் இரண்டாவது முறையாகத் தெளிவாகச் சொல்லிவிட்டனர்.
2016 தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற அரசியல் அனுபவம் உள்ள பெண் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை அப்போது அரசியல் அனுபவம் இல்லாத ட்ரம்ப் தோற்கடித்த நிலையில், 2024 தேர்தலிலும் கமலா ஹாரிஸை தற்போது அரசியல் அனுபவம் பெற்றுவிட்ட டிரம்ப் தோற்கடித்துள்ளார். ட்ரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 'ஒரு (துருவ) நட்சத்திரம் தோன்றியுள்ளது'' என்று பெருமிதப்பட்டுள்ளார்
வயது முதிர்ந்த ஜோ பைடன் செயல் குறைபாட்டால், கமலா ஹாரிஸின் உற்சாகத் தேர்தல் பிரசாரம் எதிர்பார்த்ததுபோல பெரும்பான்மை மக்களைக் கவரவில்லை. தொடக்கத்தில் சொல்லப்பட்டது போல, பைடன் மீண்டும் போட்டியிட்டிருந்தால் மிகவும் மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பார். இத்தனைக்கும் ட்ரம்ப் மீது 34 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை மன்ஹாட்டனில் வணிக விவரங்களைத் தவறாகப் பதிவு செய்ததற்காகப் போடப்பட்டிருக்கும் வழக்குகளாகும்.
வரும் நவம்பர் 26-இல் ட்ரம்ப் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் தண்டனை அறிவிக்கப்படும் என்ற நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட்டதுடன், வென்றும் காட்டியுள்ளார். வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், தண்டனை வழங்கப்படாததால் தேர்தலில் போட்டியிட சிக்கல் ஏற்படவில்லை. தீர்ப்பில் தண்டனை சுமத்தப்பட்டால், டிரம்ப் அதிபராவதில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதிபராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இளம் வயதிலேயே அடி மேல் அடி எடுத்து வைத்த டிரம்ப், 1987-இல் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். 1999-இல் கட்சியிலிருந்து வெளியேறி 2009-இல் மீண்டும் இணைந்து, 2011-இ ல் மீண்டும் வெளியேறி, 2012-இல் மீண்டும் குடியரசுக் கட்சியில் டிரம்ப் இணைந்தார்.
இந்தியாவுக்கு அனுகூலம்
ட்ரம்ப் இந்தியாவுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2016 தேர்தலில் ட்ரம்புக்கு அவினாஷ் என்ற இந்தியர் தேர்தல் கணிப்பு குறித்து உதவியிருந்தார்.
மிகப் பெரிய கோடீஸ்வரர்
ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி டாலர் வருமானம் ஈட்டும் டிரம்ப் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்பவான். பெரும்பாலான நாடுகளிலும் அவரது வியாபாரம் விரிவடைள்ளது. பல சூதாட்ட விடுதிகளுக்குச் சொந்தக்காரர். அவற்றில் மிகப் பெரிய சூதாட்ட விடுதி ஒன்றின் பெயர் 'தாஜ்' மஹால்'. ஆடம்பர விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும், சொகுசுப் படகுகளையும் அவர் வைத்துள்ளார். பல நாடுகளில் கோல்ப் மைதானங்களும், சொத்துகள் பலவும் டிரம்புக்குச் சொந்தம்.
இவர் இந்தியாவில் தில்லி, மும்பை, புணே உள்ளிட்ட நகரங்களில் கட்டட நிர்மாணப் பணிகளில் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளார். அதிபர் பதவிக்கு இதுவரை போட்டியிட்டவர்களைக் காட்டிலும் பெரும் பணக்காரர்தான் எழுபத்து எட்டு வயதாகும் டிரம்ப்.
எழுத்தாளர், தொலைக்காட்சி நடிகர், திரைப்பட நடிகர், பேச்சாளர்.. என்று பன்முகத் திறமையாளரான ட்ரம்பின் சொத்தின் மதிப்பு சுமார் முப்பது ஆயிரம் கோடி டாலர்கள்தான்.
அதிபருக்கான சலுகைகள்...
ஆண்டுதோறும் அதிபருக்கான செலவினங்கள் எவ்வளவு தெரியுமா? சம்பளம்- நான்கு லட்சம் டாலர்கள், வெள்ளை மாளிகை செலவுகள்- ஐம்பதாயிரம் டாலர்கள். சுற்றுப் பயணங்கள்- ஒரு லட்சம் டாலர்கள். வெள்ளைமாளிகையில் பொழுது போக்குக்காக..- பத்தொன்பதாயிரம் டாலர்கள்.
வெள்ளை மாளிகையில் நூறு பணியாளர்கள் உள்ளனர். பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சொகுசு கார். ஓய்வெடுக்க தனி பங்களா, பாதுகாப்புச் செலவுகளை அரசு ஏற்கும். டிரம்புக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்களில் ஒருவரான இவன்கா பேரழகி என்பதோடு, தொழிலதிபரும்கூட! ட்ரம்புக்கு எட்டு பேரக் குழந்தைகள்.
ட்ரம்பின் மனைவி மெலனியா எழுதி, அண்மையில் வெளியிட்டிருக்கும் 'மெலானியா' (நினைவு குறிப்புகள்) எனும் நூல் பரபரப்பாக விற்பனையாவதில் ட்ரம்புக்கு மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.
தேர்தலில் வெற்றியைத் தொட்டபோது ட்ரம்ப், 'மக்கள் வாக்குகளை அதிகம் பெற்றது இனிக்கிறது. நாங்கள் எங்கள் எல்லைகளை மூடப் போகிறோம். மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் சட்டப்பூர்வமாக குடியேற வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

தொகுதி நிலவரம் - கெங்கவல்லி! வெற்றிக்கு மல்லுக்கட்டும் திமுக-அதிமுக!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

