நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் "தி டார்க் ஹெவன்". பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். கோதை எண்டர்டெயின்மென்ட் மற்றும் எம். எஸ். மீடியா ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் நகுல் பேசும் போது...""இதில் நான் போலீஸôக நடித்திருக்கிறேன் .நான் சினிமாவிற்கு வந்து இப்போதுதான் முதல் முறையாக இப்படி நடிக்கிறேன்.
எனவே முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி ஆடை மீது எனக்கு ஒரு காதல் உண்டு.
நான் நடிக்க வந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது. இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன். இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டுகளை கடந்து விட்டேன்.
என்னை வளர்த்து ஆளாக்கி விட்டவர்கள் நீங்கள்தான் .என் நன்றிக்குரியவர்கள் முன்னால் நான் இப்போது நிற்கிறேன். மிக்க நன்றி. இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன். சினிமா எனது வாழ்க்கை , நான் கடந்த காலத்தை பற்றிக் கவலைப்படுவதில்லை. அதை நினைத்துப் பார்ப்பதில்லை. இன்றைய இந்தத் தருணத்தை மட்டுமே இனிமையாக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். எதிர்காலத்தைப் பற்றி நான் நினைப்பதில்லை.
ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றத்தைக் காண்கிறேன். ஒவ்வொரு நாளும் கேமரா முன் நிற்கும்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. நல்ல கதைதான் படத்திற்கு முக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நான் முடிந்த அளவிற்கு அனைவரையும் கவரும்படி இதில் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன். இது மாஸ் ஆக்ஷன் படம் போல் இல்லாவிட்டாலும் "பாபநாசம்" படத்தைப் பார்த்த அந்த உணர்வு ஏற்படும்"" என்றார் நகுல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.