ஸ்ரீ சித்ரா பௌர்ணவி ஃபிலிம் நிறுவனத்தின் உருவாகியுள்ள படம் 'செல்ல குட்டி'. டாக்டர்.டிட்டோ, மகேஷ், தீபிக்ஷா, சிம்ரன், சாம்ஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல்களுக்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசையமைத்துள்ளார். பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபி ஆண்டனி நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை சகாயநாதன் இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும போது... ''1990-களில் நடக்கும் காதல், துரோகம் கலந்த கதை. வெட்ட வெளியில்தான் முழு படமும். எந்த பிரத்யேக அரங்கும் கிடையாது. திடீரென்று மழை பெய்யும்.
திடீரென்று காற்று வீசும். எல்லாவற்றுக்கும் காத்திருக்க வேண்டும. குறிப்பாக 1990-களைச் சேர்ந்த ஒரு பெண்ணை காண்பிப்பது பெரும் சவால். கோகுல் சாண்டல் பவுடர், ரோஸ் கலர் ரிப்பன், மருதாணி பூசிய விரல்கள், காற்றில் புரளும் கொத்து முடி, பித்த வெடிப்பு பாதம், ஈரம் ததும்பும் ஸ்பரிசங்கள்...
இப்படி நிறைய விஷயங்களை உன்னிப்பாக கொண்டு வந்தோம். இந்த இரண்டு பேருக்குமான காதல் படத்தின் முக்கிய பங்கு வகிக்கும். செல்போன் கோபுரம், கேபிள் வயர்கள், போக்குவரத்து சத்தங்கள் இல்லாத பகுதிகளில்தான் படப்பிடிப்பு.
குடிக்கும் தண்ணீரை கூட சுமந்து செல்ல வேண்டும். போய்க் கொண்டே இருப்போம். திடீரென்று ஒரு இடம் வரும். அங்கே கேமிரா வைப்போம். அவர்கள் நடிப்பார்கள். இது தவிர மற்ற நடிகர்களின் உழைப்பும் அபாரம். இப்படி படப்பிடிப்பு சவால்கள் தனி'' என்றார் இயக்குநர். தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அன்பும் பரிவும் நிரந்தரம்!

உதகையில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது
உறவின் மகத்துவம்

கோலிவுட் ஸ்டூடியோ!
வீடியோக்கள்

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

