மாமல்லபுரத்தில் "கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து' என அழைக்கப்படும் பந்து வடிவிலான பாறை சுற்றுலாப் பயணிகளுக்கு அதிசயமாக அமைந்திருக்கிறது.
அதே மாதிரியான பாறைகள் ரஷியாவின் சைபீரியாவில் சயான் மலைத் தொடரிலும், இலங்கையில் வெருகல் மலையில் அமைந்திருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியிலும் உள்ளன. அதில், சைபீரியாவில் இருக்கும் பாறை அடுத்த கணம் கீழே விழுந்துவிடும் என்று சொல்லும்படியாக அமைந்துள்ளது. ஆனால், பல நூற்றாண்டுகளானாலும் அது கீழே விழாது. காரணம் அவை வேறு வேறு பாறைகள் அல்ல என்பதுதான்.
தொடக்கத்தில் ஒரே பாறையாக இருந்தவை. காற்று, சூறாவளி, மழை, வெப்பம் இவற்றால் பாதிப்படைந்து பல வகை விரிசல் ஏற்பட்டு சிதைந்து உதிர்ந்து இன்றைக்கு இருக்கும் வடிவத்தைப் பெற்றுள்ளன.
எதிர்காலத்தில், பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாறைகளின் வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம் என்கின்றனர் புவியியல் விஞ்ஞானிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.