கார்த்தியின் 'மார்ஷல்'

'வா வாத்தியார்', 'சர்தார் 2' என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்ட கார்த்தி, தனது 29-ஆவது படத்துக்கு பூஜை போட்டுள்ளார்.
கார்த்தியின் 'மார்ஷல்'
Published on
Updated on
1 min read

'வா வாத்தியார்', 'சர்தார் 2' என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்ட கார்த்தி, தனது 29-ஆவது படத்துக்கு பூஜை போட்டுள்ளார். கதைகள் தேர்வில் தனி கவனம் செலுத்தி வரும் கார்த்தி, படத்திற்குப் படம் வெவ்வேறு ஜானர்கள் அமையுமாறு பார்த்துக் கொள்வதுடன், தனது பாத்திரத் தேர்விலும் தனித்துவத்தை நிலைநாட்டி வருகிறார்.

இந்தாண்டில் கார்த்தியின் நடிப்பில் 'வா வாத்தியார்' முதலிலும், அதனைத் தொடர்ந்து 'சர்தார் 2'வும் வெளியாக உள்ளது. இந்நிலையில்தான் தனது 29-ஆவது படத்தை கையில் எடுக்கிறார். 'டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இப்படத்தை இயக்குகிறார். இயக்குநர் தமிழின் சொந்த ஊர் ராமேசுவரம் என்பதால், ராமேசுவரம் - இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார். இதுதான் படமாகவுள்ளது.

இது ஒரு பீரியட் ஃபிலிம். படத்துக்கு 'மார்ஷல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்கு பஹத் பாசிலிடம் நடிக்கக் கேட்டனர். அவரது தேதிகள் கிடைக்காமல் போனதால், அந்த ரோலில் நிவின் பாலி நடிக்கிறார். ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் முதன் முறையாக கார்த்தியின் ஜோடியாகிறார்.

சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு போன்ற சிறந்த திறமையாளர்கள் பணிபுரிய உள்ளனர்.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு மற்றும் இஷான் சக்சேனா தலைமையிலான ஐ.வி.ஒய். எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் 1960-களின் ராமேசுவரத்தை மீண்டும் உருவாக்கும் விரிவான அரங்குகள் இடம்பெற இருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அகில இந்திய அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. காரைக்கால், ராமேசுவரம் ஆகிய கடற்பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com