தமிழ்ப் பணி...

தமிழ் மொழியின் மகத்துவம், இலக்கண, இலக்கிய நுால்களின் சிறப்புகளை எடுத்துரைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவதில் பல்வேறு அமைப்புகளும் தீவிர செயலாற்றுகின்றன.
தமிழ்ப் பணி...
Published on
Updated on
1 min read

பி.பெரியார்மன்னன்

தமிழ் மொழியின் மகத்துவம், இலக்கண, இலக்கிய நுால்களின் சிறப்புகளை எடுத்துரைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவதில் பல்வேறு அமைப்புகளும் தீவிர செயலாற்றுகின்றன.

இந்த வரிசையில் சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியில் முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்ப் பணியாற்றி வரும் வாழப்பாடி இலக்கியப் பேரவையின் பங்கும் குறிப்பிடத்தக்தாகும்.

இந்த அமைப்பின் சிறப்புகள் குறித்து நிர்வாகிகள் கூறியது:

'தமிழ் ஆர்வலர்கள் சிவலிங்கனார், குரு.அங்கப்பனார், சீனி.வேங்கட்டரமணன், நன்னீரடிகள், சண்முகசுந்தரனார், கந்தசாமி, ராமசாமி உள்ளிட்டோர் அமைப்பைத் தொடங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்தி தமிழின் சிறப்புகளை பறைசாற்றினர். பேரவையைத் துவக்கி அரும்பணியாற்றிய தமிழ் சான்றோர்களில் பலர் உயிர்நீத்தாலும், இவர்கள் வளர்த்த மொழிப்பற்று இன்றளவும் நீடித்து நிற்கிறது.

எம்கோ, செந்தில்குமார், முனிரத்தினம், புலவர் கணேசன், முனைவர் மன்னன், ஆடிட்டர் குப்பமுத்து உள்ளிட்டோர் பேரவையைத் தொடர்ந்து நடத்தி, தமிழின் பெருமைகளைப் போற்றி எடுத்துரைத்து வருகின்றனர்.

புதிய படைப்பாளிகளை உருவாக்குதல், நூல்களை வெளியிடுதல், கிராமியக் கலைகளை அரங்கேற்றம் செய்தல், மாணவ மாணவியரிடையே பேச்சு - கட்டுரைப் போட்டிகளை நடத்துதல், சேவையாளர்களைப் பாராட்டி விருதுகள் வழங்குதல், பட்டிமன்றங்கள், விவாத மேடைகள், மேடை நாடகங்கள் அரங்கேற்றம் செய்தும் அற இலக்கியங்கள், பாரம்பரியக் கலைகளைப் புகட்டியும் தொடர்ந்து தமிழ்ப் பணியாற்றி வருகின்றனர். ராமாயண, மகாபாரத இதிகாசங்கள் குறித்தும் அறக்கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

25 ஆண்டுகளாக திருவள்ளுவர் தின விழாவையொட்டி, கிராமிய கலைநிகழ்ச்சிகள், நூல்கள் வெளியீட்டு விழா, திருவள்ளுவர் ரத ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இதுபோன்ற அமைப்புகள் உயிர்ப்போடு இயங்கும் வரை தமிழ் மொழியின் வளமையும், தொன்மையும், புதுமையும் எள்ளளவும் குன்றாது; குறையாது'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com