'சந்தியா ராகம்' தொடரிலிருந்து நடிகர் ராஜ்கமலும், 'சின்னஞ்சிறு கிளியே' தொடரிலிருந்து நடிகை அபிதாவும் வெளியேறி இருக்கிறார்கள்.
இரண்டு பேருமே அவரவர் நடித்து வந்த தொடர்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வந்தவர்கள். ராஜ்கமல் வெளியேற்றத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆயிரம் எபிசோடுகள் வரை நெருங்கி விட்ட நிலையில், திடீரென அவர் வெளியேறியதன் பின்னணியில் குறிப்பிட்ட காரணம் எதுவுமில்லை என அவரே விடியோ வெளியிட்டிருக்கிறார். தவிர்க்க இயலாத சில காரணங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அபிதா விஷயம் தொடர்பாக சீரியல் தொடர்புடைய வட்டாரத்தில் விசாரித்த போது, 'நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீரியலுக்குத் திரும்பிய நிலையில் அவரது கேரக்டருக்கு தொடக்கத்திலிருந்த முக்கியத்துவம் போகப் போகக் குறைந்ததாகக் கருதியே வெளியேறினார் என்றனர் சிலர்.
அபிதாவையே தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, 'என்னுடைய அம்மா உடல்நலனில் கொஞ்சம் பிரச்னை. பக்கத்துல இருந்து கவனிக்க வேண்டியதிருந்தது. ஷூட்டிங்குக்காக பதினைஞ்சு நாள் சென்னையில இருந்தா அவங்களைக் கவனிக்க முடியாது. அதனால நானே விஷயத்தைச் சொல்லிட்டு வெளியேறிட்டேன்' என்கிறார்.
'மெட்டி ஒலி' சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா. சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'சாமந்தி' சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார்.
'வழக்கமாக 'ஒருமுறை மீடியாவுக்குள் வந்துவிட்டால், நாம் எப்போதும் அங்கேயே இருக்கத்தான் தோன்றும்' என்பார்கள். நானும் என்றைக்குமே கேமராவைவிட்டு ஒதுங்கியதில்லை. இந்த இடைவேளைக் காலம் என்னுடைய நடிப்புத் திறனை மெருகேற்ற எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. 'மெட்டி ஒலி 2' பற்றிய பேச்சுகள் நடந்தபோது நான் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்போதும் அதுபற்றிய பேச்சுகள் இருக்கின்றன. கூடிய விரைவில் அது நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன' என்கிறார் விஷ்வா.
'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். ரஜினி ரசிகர் மன்றத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வந்தவர், சின்ன திரையைத் தாண்டி சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது தந்தை தங்கவேல் கடந்த வாரம் காலமானார். அவரது மரணச் செய்தி கேள்விப்பட்டதும் உடனே ஜீவாவை தொலைபேசியில் அழைத்துப் பேசி ஆறுதல் கூறியிருக்கிறார் ரஜினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மீது காா் மோதல்: தம்பதி, மகள்கள் உள்பட ஐவா் உயிரிழப்பு

சந்தியா ராகம் தொடரில் கார்த்திகை தீபம் சீரியல் நடிகர்!

சந்தியா ராகம் தொடரிலிருந்து விலகிய ராஜ்கமல்! காரணம் என்ன?

இதயம் தொடரில் இணையும் சக்திவேல் சீரியல் நடிகர்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



