பேட்டுக்கு பேட்... கிடாருக்கு கிடார்...

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்கக் காரணமாக அமைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸை மறக்க முடியுமா?
பேட்டுக்கு  பேட்...  கிடாருக்கு கிடார்...
Updated on
1 min read

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்கக் காரணமாக அமைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸை மறக்க முடியுமா?

ஜெமிமாவுக்கு கிரிக்கெட்டுடன் பாட்டுப் பாடவும் , கிடார் வாசிக்கவும் வரும். கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் பாட, ஜெமிமா கிடார் வாசிக்கும் நிகழ்ச்சி 2024-இல் நிகழ்ந்தது.

"உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி வெற்றி பெற்றால் நான் மீண்டும் பாடுவேன்... ஜெமிமா கிடார் வாசிப்பார்' என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு, அவர் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் போற்றும் வகையில் கிரிக்கெட் பேட் வடிவ கிடார் இசைக் கருவியைப் பரிசளித்ததுடன், ஜெமிமாவுடன் பாடி தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

ஜனவரி 9-இல் அந்த இசை நிகழ்ச்சி மும்பையில் அரங்கேறியது. கிரிக்கெட் பேட் வடிவிலான பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட கிடார் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை ஜெமிமாவிடம் கவாஸ்கர் பரிசாக விழாவின்போது ஒப்படைத்தார்.

எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் இருக்கும் கவாஸ்கர், "இன்றைய தினம் நான் ஓபனிங் பேட்ஸ் மேன் அல்ல... ஜெமிமாதான் ஓபனிங் பேட்ஸ் உமன்... அதனால் மரப் பெட்டியைத் திறக்க வேண்டிய பொறுப்பு ஜெமிமாவுக்கானது'' என்றார்.

பெட்டியைத் திறந்து பார்த்ததும், ஜெமிமா ஆச்சரியத்தில் துள்ளினார். 'பேட்டுக்கு பேட்... கிடாருக்கு கிடார்...' என்றவாறு கிடாரை பெட்டியிலிருந்து வெளியே எடுத்து கூட்டத்தினருக்குக் காண்பித்து... இசைத்துப் பார்த்தார்.

'பேட் வடிவ கிடாரை இசைக்கப் பயன்படுத்தணுமா அல்லது பேட்டிங் செய்யப் பயன்படுத்தணுமா ?' என்று ஜெமிமா வேடிக்கையாகக் கேட்க, 'இரண்டிற்கும் பயன்படுத்தலாம்' என்று கவாஸ்கர் சொன்னார்.

'ஷோலே' படத்தின் 'யே தோஸ்தி' பாடலை மூத்த இளைய தலைமுறை கிரிக்கெட் நட்சத்திரங்களான காவஸ்கரும், ஜெமிமாவும் பாடி அமோக கைதட்டல்களைப் பெற்றார்கள்.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல், அவர் போட்டியின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தினார்.

சர்வதேசப் போட்டித் தொடர் முடிந்த நிலையில், ஜெமிமா இப்போது தனது கவனத்தை டபிள்யூ.பி.எல். தொடரின் பக்கம் திருப்பியுள்ளார். இந்தத் தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ûஸ வீழ்த்தியதன் மூலம் தொடங்கியது. தில்லி கேபிடல்ஸ் அணி அவரைத் தங்கள் கேப்டனாக நியமித்துள்ளது. பல ஆண்டுகளாக அந்த அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு முக்கிய வீரராக இருந்த ஜெமிமாவிடம், இப்போது அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com