‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

விரைவில் திருக்குறள் இரண்டாம் பாகம்!

'காமராஜ்', 'வெல்கம் பேக் காந்தி' படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், 'திருக்குறள்' திரைப்படத்தைச் சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது.

Published On :12 ஜூலை 2026, 4:09 am IST

'காமராஜ்', 'வெல்கம் பேக் காந்தி' படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், 'திருக்குறள்' திரைப்படத்தைச் சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் இணையத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 'திருக்குறள்' படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துகளை வலியுறுத்தி, இரண்டாம் பாகம் தயாராகிறது. ஆங்கிலத்தில் ' ஒன்ஸ் ஆப்பான் ஏ டைம் என் ஹிந்துஸ்தான்' என்ற பெயரிலும் தயாராகிறது.

திருக்குறள் முதல் பாகத்தில் வள்ளுவனாக நடித்த கலைச்சோழன், வாசுகியாக நடித்த தனலட்சுமியும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். விஜடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது.

படம் குறித்து ஏ.ஜெ. பாலகிருஷ்ணன் பேசும்போது, 'ஜி.யூ.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவுடன்தான்அது உலகக் கவனம் பெற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ரோம், கிரேக்கம் போன்ற மேற்குலக நாடுகளுடனும், சீனா, இந்தோனேசியா போன்ற கிழக்காசிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

படத்தில் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மேலும் பல ஆளுமைகள், கலாசாரத் தொடர்புகள், வணிகத் தொடர்பு, தமிழர்களின் சங்க கால பண்பட்ட நாகரிகம் படமாக்கப்பட உள்ளது. சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் இப்படத்தில் பயன்படுத்தப்பட உள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.