மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

லண்டனில் மகாத்மாவின் சிலை!

பரந்து விரிந்த பசுமைமிகு எழில் கொஞ்சும் இனிமையான பகுதியான இங்கிலாந்து அரசின் பாராளுமன்ற வளாகத்தை லண்டன் மாநகருக்கு வருவோர் பார்த்து மகிழ்வர்.

News image
Updated On :26 ஜூலை 2026, 4:06 am IST

பரந்து விரிந்த பசுமைமிகு எழில் கொஞ்சும் இனிமையான பகுதியான இங்கிலாந்து அரசின் பாராளுமன்ற வளாகத்தை லண்டன் மாநகருக்கு வருவோர் பார்த்து மகிழ்வர். அங்கே மக்களைக் கவர்ந்திருக்கும் காட்சிப் பொருளாக நிற்பது மகாத்மா காந்தியின் அரிய சிலையாகும்.

அந்தச் சிலையை செதுக்கியவர் பிலிப் ஜாக்சன் என்ற புகழ் பெற்ற சிற்பி; இதை நிறுவுவதற்கு பெருமுயற்சி எடுத்தவர் தொழிற்கட்சியின் முன்னணித் தலைவரும் முதிர்ந்த பொருளாதார மேதையான மேகநாத் தேசாய்; இதற்கு துணை நின்று வழிகாட்டி உதவியவர் அப்பொழுது இந்தியத் தூதராக இங்கிலாந்தில் பணியாற்றிய ரஞ்சன் மத்தாய்.

2015 -ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அண்ணலின் சிலையைத் திறந்து வைத்தவர் பிரிட்டனின் அன்றைய பிரதமர் டேவிட் கேமரோன். இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற கோபால கிருஷ்ண காந்தி பேசுகையில், ""லண்டனில் காந்திஜியின் சிலை திறக்கப்படுவதை அறிந்து, இந்திய மக்கள் மகிழ்கிறார்கள். அதே இந்திய தேசத்தில், ஒரு சிறு குழுவினர் அண்ணலைக் கொன்ற கோட்சேயின் சிலையைத் திறந்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதே என்ற செய்தி கேட்டு வருந்துகின்றனர்'' என்றார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன், கோபால கிருஷ்ண காந்தியின் கையைப் பிடித்துக் கொண்ட அருண் ஜேட்லி , "கோபால்... நீங்கள் சொல்வதைப் போல் இந்தியாவில் எதுவும் நடக்காது; இதுவே நான் உங்களுக்கு அளிக்கும் உறுதிமொழி'' என்று சொன்னார். அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஓரிடத்தில் மாறுபட்ட ஐந்து ஆளுமைகள்

உலகின் பல நகரங்களில் பல இடங்களில் காந்திஜியின் சிலை காட்சிப் பொருளாக இருந்தாலும், லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலை பல சிறப்புகளை உள்ளடக்கி உள்ளன.

பிரிட்டானிய ஆட்சியை இந்திய மண்ணிலிருந்து அகற்றியதில் முழுமுதல் காரணமான காந்தியின் சிலையை, அதன் பாராளுமன்ற வளாகத்திலேயே நிறுவியதோடு, அவரது சிலைக்கு வலதுபுறத்தில் "காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி' என்று இகழ்ந்த வின்ஸ்டன் சர்ச்சில் சிலையும், தென்னாப்பிரிக்காவில் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திய மார்சல் ஸ்மட்சின் சிலையும் உள்ளன.

அமெரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராடி உயிர்நீத்த ஆபிரகாம் லிங்கனின் சிலையும், தென்னாப்பிரிக்க மக்களின் சுதந்திரத்துக்காக அகிம்சை வழியில் போராடி வெற்றி கண்ட "சுதந்திரச் சுடர்' நெல்சன் மண்டேலாவின் சிலையும் இடது புறத்தில் உள்ளன.

ஒரே இடத்தில், மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும், ஐந்து ஆளுமைகளின் சிலைகள் அமைந்திருப்பது, ஓர் அற்புதக் காட்சி தானே! இதனைக் காணவும் அண்ணல் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து, கண்ணில் ஒற்றியும் மகிழ, நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இது ஒரு வாய்ப்பு என்பதைவிட, மனிதனுக்குக் கிடைக்கும் வரமாகும் என்று பார்வையாளர்கள் மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.