யாத்திசை' தரணி ராசேந்திரன் அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். சேயோன், பவானி, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஜே.கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்துக்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமார் இந்திய தேசிய ராணுவ (ஐ.என்.ஏ.) அதிகாரியாக நடித்துள்ளார். பீரியட் படம் என்பதால், கதையை மேலும் செழுமைப்படுத்த பிரம்மாண்டமான வி.எப்.எக்ஸ். காட்சிகள் இடம்பெறுகின்றன.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் காட்சித் தரத்தை உயர்த்தவும், கதையை மேலும் செழுமைப்படுத்தவும் பிரம்மாண்டமான பணிகள் இடம்பெறவுள்ளதால், பின்னணிப் பணிகள் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன. படம் திரையரங்குகளில் வெளியாகும் போது, பார்வையாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்குவதே குழுவின் நோக்கமாகும்.
உணர்ச்சிப்பூர்வமான கதை சொல்லலுடனும், காட்சியழகுடனும் இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






