ஆட்லர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத், அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் 'தி வைல்ட் கால்'. அனிமேஷன் வனவிலங்கு சாகசப் படமான இதை ராஜ்கிர் சஃபாரி வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே பெயரில் நடைபெற்று வரும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான, 2026-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில், 'தி வைல்ட் கால்' திரைப்படம், 'சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான' விருதை வென்றுள்ளது.
லைட்ஸ் ஆன் மீடியாவின் அனிமேஷன் பணிகள் வெங்கி சந்திரசேகர் தலைமையில் உருவாக்கப்பட்டது. இவர்களோடு இணைந்து ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசை நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருந்தது.
இத்திரைப்படம் சிங்கம், புலிகள் இந்தியாவின் பல்லுயிர்ப் பெருக்க மையங்களான இந்தியப் பெருங்கடல், மேற்குத் தொடர்ச்சி மலைகள், இமயமலை, தார் பாலைவனம் வழியாகப் பயணிப்பதைப் பின்தொடர்கிறது. மேலும் இந்திய யானை, பெருங்குருவி உள்பட 23 குறிப்பிடத்தக்க உயிரினங்களை
பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, வாழ்விடப் பாதுகாப்பு, மனித-வனவிலங்கு சகவாழ்வு குறித்த முக்கிய செய்திகளையும் வழங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உடல் எடை குறைப்புக்கு போலி மருந்து விற்று பல கோடி மோசடி செய்ததாக 3 பெண்கள் கைது!

ஆப்பிரிக்காவில் பரவும் எபோலா தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்கா தீவிரம்

விபத்தில் கால் துண்டிக்கப்பட்டவருக்கு ரூ. 44 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு

நடிகர் துருவ் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


