தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

இருளில் ஒரு காதல்

டி. அந்தோணி தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஏன் என்னை ஏதோ செய்தாய்'.

News image
Updated On :31 மே 2026, 2:23 pm IST

டி. அந்தோணி தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஏன் என்னை ஏதோ செய்தாய்'. மும்பை மாடல் அழகி மதுமிதா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா, ஆலம்ஷா, மாதங்கி உள்ளிட்ட பலர் கதையின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜோய் ரெடா, அசோக்

ஸ்ரீதரன் இருவரும் இசையமைக்கிறார்கள். ஜெய்கர் ஹரிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'சிறுவயதிலேயே தாயை இழந்த கதாநாயகன் மது, மாது என இருட்டு உலகில் வாழ்க்கையை கழிக்கிறான். இந்தச் சூழலில் அவனது வாழ்க்கையில் காதல் நுழைகிறது.அது அவனது வாழ்க்கையைப் புரட்டி போட்டதா? அவனது இருட்டு உலகை மாற்றியதா? என்பதே கதை.

சினிமா மீதான ஆசையால் என்ஜினீயரிங் படித்து, அமெரிக்காவில் பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டு விட்டு வந்திருக்கிறேன். சிறு வயது முதலே கதை, கேமிரா என மனதுக்குள் ஓர் அலையடிக்கும். அந்த விருப்பத்தில் அதை முழுமையாகக் கற்று குறும்படங்கள் எடுத்தேன். அதை சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பினேன். அதற்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரங்கள் என்னை தொடர்ந்து பயணம் செய்து வைத்துள்ளது.

காதலை புதுமையான பாணியில் சொல்ல நினைத்து முயற்சித்துள்ளேன். இது ஒரு மாறுபட்ட ரொமான்ஸ் காதல் கதையாக இருக்கும். இது எனது முதல் படைப்பு. இந்தப் படைப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜூலை மாதம் படத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.