மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கைப்பேசியை அணைத்து வைத்தால்..!

எப்போதும் கைப்பேசியை வைத்திருந்து இடைவிடாமல் யூடியூப் சானல்களைப் பார்த்தல், சமூக ஊடக வம்புகள், நண்பர்களுடன் தேவையற்ற அரட்டை, ரீல்ஸ்... என்றெல்லாம் பொழுதுபோக்கி வருவோர் கவனிக்க வேண்டிய அறிவியல்பூர்வமான அறிவுரை என்ன தெரியுமா? 'கைப்பேசியை கொஞ்ச நேரம் அணைத்து வையுங்கள். உங்கள் மூளைத் திறன் கூடும்' என்பதே!

News image
Updated On :31 மே 2026, 1:32 pm IST

எப்போதும் கைப்பேசியை வைத்திருந்து இடைவிடாமல் யூடியூப் சானல்களைப் பார்த்தல், சமூக ஊடக வம்புகள், நண்பர்களுடன் தேவையற்ற அரட்டை, ரீல்ஸ்... என்றெல்லாம் பொழுதுபோக்கி வருவோர் கவனிக்க வேண்டிய அறிவியல்பூர்வமான அறிவுரை என்ன தெரியுமா? 'கைப்பேசியை கொஞ்ச நேரம் அணைத்து வையுங்கள். உங்கள் மூளைத் திறன் கூடும்' என்பதே!

சமூக ஊடகங்களில் பாதிப்பு என்னவென்றால், அதற்கு அடிமையாக்குவதேயாகும். சாலையில் சற்றுநேரம் நின்று கவனித்தால், பெரும்பாலானோர் கைப்பேசியை கையில் வைத்திருப்பர். பேசிக் கொண்டோ அல்லது இணையத்தில் மூழ்கியபடியோ செல்வர்.

அண்மையில் நடைபெற்ற ஓர் ஆய்வின் முடிவை அனைவரும் அறிய வேண்டியது அவசியம். 467 பேர் ஆய்வுக்கு உட்பட்டனர். 14 நாள்கள் இவர்கள் இடைவிடாமல் கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் கைப்பேசியில் பேசவும், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இணையத்தில் உலாவி நேரத்தைச் செலவிடுவதும், சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடுவதும் நீக்கப்பட்டன. ஐந்து மணி நேரம் ஸ்கீரின் டைமாகச் செலவழித்தவர்கள் மூன்று மணி நேரத்துக்கும் குறைவாகவே அதில் செலவழிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இரண்டு வார முடிவில் அவர்களது கவனக் குவிப்பு அதிகரித்தது. மனநலமும், உடல்நலமும் மேம்பட்டது. நடத்தையில் நல்ல மாறுதலும் தென்பட்டது. சிறிது நேரத்தை கைப்பேசியில் குறைத்ததற்கே இவ்வளவு ஆக்கபூர்வமான முன்னேற்றமா என்று அனைவரும் வியந்தனர். இதேபோல், 2025 நவம்பரில் 'ஜமா நெட்வொர்க்' பிரசுரித்த ஒரு ஹார்வேர்ட் ஆய்வு இன்னும் பல சுவையான தகவல்களைத் தருகிறது. இதில் பங்கேற்ற 400 தன்னார்வலர்கள் சிறிது நேரம் கைப்பேசியை மூடி வைத்தாலும், சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்தாலும் குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகிறது என்பதைக் கண்டனர். மனச்சோர்வு 24.8 சதவீதமும், கவலை 16.1 சதவீதமும் இன்úஸôம்னியா எனும் தூக்கமின்மை வியாதி 14.5 சதவீதமும் குறைகிறது என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

-ச. நாகராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.