கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இயக்குநர்களின் லைன் அப்!

லோகேஷ் கனகராஜ், பா. ரஞ்ஜித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர்களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம்...

News image
Updated On :31 மே 2026, 2:25 pm IST

லோகேஷ் கனகராஜ், பா. ரஞ்ஜித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர்களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம்...

தயாரிப்பாளராகவும் களம் இறங்கும் லோகேஷ்!

கோலிவுட்டின் தற்போதைய 'மோஸ்ட் வான்டென்ட்' டைரக்டர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். இவருக்கு அதிகப்படியான ரசிகர்களும் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடிப்பில், இவரது இயக்கத்தில் 'கூலி' அண்மையில் வெளிவந்தது. அதற்குள்ளாகவே இவரின் அடுத்தடுத்தப் படங்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தன்னுடைய லைன் அப் குறித்தும் பேட்டிகளில் அவர் பகிர்ந்திருந்தார். அவருடைய அடுத்தடுத்தத் திட்டம் பற்றி இதில் பார்ப்போம்...

'கூலி' படத்தை முடித்த பிறகு 'கைதி -2' படத்துக்காக பம்பரமாகச் சுற்றி வருகிறார்.

Story image

கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' படத்துக்கு அப்போதே இரண்டாம் பாகம் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பை உருவானது. மேலும், 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா கேமியோ செய்திருப்பார். 'விக்ரம்' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு லோகேஷ் கொடுத்த நேர்காணல்களில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஒரு தனி திரைப்படம் எடுப்பேன்' எனக் கூறி, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தார்.

அண்மையில் கொடுத்த நேர்காணலில் 'கைதி -2' படத்துக்குப் பிறகு ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு முழுத் திரைப்படம் எடுப்பேன். அப்போதுதான் 'விக்ரம் -2' திரைப்படத்தில் இந்த யூனிவர்ஸ் முடிவு பெறும்' எனக் கூறியிருந்தார்.

இப்படியான லைன் அப் திட்டங்களை வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர்களின் தேதி கிடைக்கவில்லை எனில், 'கூலி' போன்ற ஸ்டாண்ட் அலோன் திரைப்படங்களைத் தொடர்ந்து எடுப்பேன்' எனவும் கூறியிருந்தார். இதையெல்லாம் தாண்டி அவர் 'எல்.சி.யூ' உருவான விதம் குறித்து ஒரு குறும்படத்தையும் எடுத்திருக்கிறார். அந்தக் குறும்படமும் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறார் லோகேஷ். அவர் தயாரித்திருக்கும் 'பென்ஸ்' , 'மிஸ்டர் பாரத்' படங்கள் குறித்த அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஞ்சித்தின் அடுத்த படம்?

பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்துக்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் 'சார்பட்டா பரம்பரை 2', 'பிர்சா முண்டா' என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன. இப்படங்களின் அப்டேட்கள்.

ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தில் சில பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படத்தை 2022-ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார் பா. ரஞ்சித்.

முதலில் வேறொரு கதையை படமாக்க நினைத்து, பிறகு 'வேட்டுவம்' படத்துக்கு கதையை மாற்றியிருக்கிறார். இப்படம் இந்தாண்டுக்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 'சார்பட்டா பரம்பரை 2' படத்துக்காகவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'சார்பட்டா பரம்பரை 1', 'ப்ளூ ஸ்டார்', 'காந்தா' ஆகிய படங்களின் திரைக்கதையாசிரியர் தமிழ் பிரபாவுடன் இணைந்து, அப்படத்துக்கான வேலைகளை கவனித்து வருகிறார் ரஞ்சித். அண்மையில், கேரளா இலக்கியத் திருவிழாவிலும் ரஞ்சித் இப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்தார். கூடிய விரைவில் இப்படம் டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கவிருப்பதாக நீண்ட நாள்களுக்கு முன்பே பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அப்படம் தொடங்கப்படாத நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகர்கள் தேர்வால் அப்படம் தாமதமானது எனவும், இப்போது ஒரு நடிகர் அக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இயக்கம், நடிப்பு பரபரக்கும் எஸ். ஜே. சூர்யா!

சிவகார்த்திகேயனுடன் நடித்த 'டான்', ஹீரோவாக 'பொம்மை', 'கடமையைச் செய்' எனப் படங்கள் நடித்துக்கொண்டிருக்கும்போது, தன் நடிப்புத் திறமையை நிரூபிக்க 'கில்லர்' என்ற கதையை ரெடி செய்து வைத்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அதற்கு பக்காவாக ஸ்கிரிப்ட்டும் தயார் செய்து, இயக்கவும் ரெடியானார்.

அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் ஒன்று வருகிறது. இதனால் ரெட் கலரில் சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார். கார் வந்த ராசியோ என்னவோ, 'மார்க் ஆண்டனி' அவரை டாப் கியரில் கொண்டு சேர்த்தது. அதன்பின், மளமளவென படங்கள் கமிட் ஆனார். 'ஜிகர்தண்டா 2'யைப் பார்த்து ரசித்த ரஜினி, 'எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள்! நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்' எனப் பாராட்டுகளையும் அள்ளி வீசினார்.

கதாபாத்திரங்களைக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா இப்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து வரும், 'இந்தியன் 3' படத்தில் தன் நடிப்பு பங்கை முடித்து விட்டார். அடுத்து 'டாடா' கவினின் ஆறாவது படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். அதன் படப்பிடிப்பும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. இதனை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'கோமாளி' பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐகே' படத்திலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

Story image

தெலுங்கில் ராம் சரண் படத்துக்கு அடுத்து நானி, பிரியங்கா மோகன் நடித்துவரும் 'சரிப்போதா சனிவாரம்' படத்திலும் நடித்துவருகிறார். அதன் படப்பிடிப்பும் ஒரு பக்கம் நடந்துவருகிறது.

-ஜி.அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.