மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் படமாக வந்து வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழ் ஆளுமைகள் சிலரின் பயோபிக் பட வேலைகள் மும்முரம் அடைந்துள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் யார்?
இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாய் பல்லவிக்குப் பதிலாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகி, இணையத்தில் பேசுபொருளானது. கெளதம் தின்னனுரி இயக்கவுள்ள இப்படத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
சாய் பல்லவி இப்படத்தில் இருந்து விலகவில்லை என்றும், 'ராமாயணம்' போன்ற மற்ற படங்களின் தேதிகள் காரணமாகவே படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது என்றும் படக்குழு தரப்பில் அண்மையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாய் பல்லவி, ருக்மினி வசந்த் ஆகிய இருவரின் நடிப்புத் திறன், கடந்த கால கதாபாத்திரங்கள் என இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரோலுக்கு இருவருமே பொருத்தமானவர்கள்தான்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்துக்கு சாய் பல்லவி முதல் தேர்வாக இருந்ததற்கு பல வலுவான காரணங்கள் உள்ளன. சாய் பல்லவி அடிப்படையில் ஒரு சிறந்த நடனக் கலைஞர். 'ஷியாம் சிங்கா ராய்' படத்தில் அவர் வெளிப்படுத்திய கிளாசிக்கல் நடன அசைவுகள், பாரம்பரியமான தோற்றம், முகபாவனைகள், ஒரு பழம்பெரும் கர்நாடக பாடகியின் உடல்மொழியோடு எளிதாக ஒத்துப்போகும்.
'கார்கி' படத்தில் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக அவர் காட்டிய முதிர்ச்சியான நடிப்பு, எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வாழ்க்கையில் சந்தித்த ஆரம்பக்கட்டப் போராட்டங்களையும், இசை உலகில் அவர் செய்த சாதனைகளையும் திரையில் கொண்டு வர பெரிதும் உதவும். சாய் பல்லவி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வார். இந்தப் படத்துக்காக அவர் கர்நாடக சங்கீத வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற்றார் என்ற செய்திகளும் வந்துள்ளன.
மேக்கப் இல்லாத அவரது இயல்பான தோற்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் எளிமையை அப்படியே பிரதிபலிக்கும். ஒருவேளை ருக்மினி வசந்த் இந்தக் கதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரிடமும் சில தனித்துவமான சிறப்பம்சங்கள் உள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றாலே அமைதியும், தெய்வீகக் களையும்தான் நினைவுக்கு வரும்.
ருக்மினி வசந்தின் முக அமைப்பு, அவரது கண்கள், பழைய புகைப்படங்களில் நாம் பார்க்கும் எம்.எஸ்.அம்மாவின் முகச்சாயலோடு நெருக்கமாக ஒத்துப்போகிறது. பல சினிமா விமர்சகர்களும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தில் ருக்மினி வசந்த் காட்டிய நுண்ணிய முகபாவனைகள், வலியைக் கண்களாலேயே கடத்தும் விதம் ரசிகர்களை வியக்க வைத்தது. ஆர்ப்பாட்டமில்லாத, ஆழமான நடிப்புக்கு அவர் ஒரு சிறந்த உதாரணம். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஆன்மிகத் தேடலை திரையில் காட்ட இந்த நடிப்பு பாணி உதவும். யார் நடித்தாலும், கர்நாடக இசையின் முடிசூடா ராணியான எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெருமையை திரை வழியே காண்பது சினிமா, இசை ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாகவே அமையும்.
வேகமெடுக்கும் இளையராஜா பயோபிக்!
அப்துல் கலாம், இளையராஜாவின் பயோபிக் படங்களில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வந்திருந்தது. இதில் அப்துல் கலாம் பயோபிக் படத்தை 'ஆதிபுருஷ்' பட இயக்குநர் ஓம் ராவுத் இயக்கவிருக்கிறார். இளையராஜா பயோபிக் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார். 'கேப்டன் மில்லர்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் இரண்டாவது முறையாக அருண் மாதேஸ்வரனுடன் இணையவிருக்கிறார் என அப்படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
ஆனால், அதன் பிறகு அப்படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. கடந்த சில மாதங்களாக இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது, இப்படத்தின் இயக்குநரை மாற்றவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன.
தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப்போவதில்லை எனப் பரவும் தகவல் உண்மையற்றது எனவும், லோகேஷ் கனகராஜின் 'டிசி' படத்தை முடித்த பிறகு திட்டமிட்டபடி இப்படத்துக்கான வேலைகளை அவர் தொடங்குவார் எனவும் அறிவித்திருக்கிறார்.
நடராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன்!
விஜய்யின் 'தி கோட்' படத்தையடுத்து சிவகார்த்திகேயனுக்கான கதைகளை உருவாக்கி வருகிறார். இன்னொரு பக்கம் 'டான்' சிபி சக்கரவர்த்தியும் கதை ரெடி செய்து வருகிறார். அவரும் மும்முரமாக ஸ்க்ரிப்ட்டைச் செதுக்கி வருகிறார்.
'குட் நைட்' இயக்குநர் விநாயக்கும் சிவாவிடம் அருமையான லைன் ஒன்றைச் சொல்லி அசத்தியுள்ளார். தவிர சுதா கொங்கராவும் சிவாவுக்கு ஒரு லைன் சொல்லியிருக்கிறார். அது 'புறநானூறு' படத்தின் கதை அல்ல என்றும் சொல்கிறார்கள்.
இவை தவிர கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக் கதையும் சிவாவின் லைன் அப்பில் இருக்கிறது. அதற்காக ஒரு குழு அமைத்து நடராஜன் பற்றிய தரவுகளை எடுக்கச் சொல்லியிருக்கிறார்.
இரு பாகங்களில் பிரபாகரனின் கதை!
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இப்போது அது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் 'சீறும் புலி' என்றும், அதில் பிரபாகரன் வேடத்தில் நடிகர் பாபி சிம்ஹா புலியுடன் உட்கார்ந்திருப்பது போல புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
அதுகுறித்து, அப்படத்தின் இயக்குநர் வெங்கடேஷ் குமாரிடம் பேசிய போது, ''பாபி சிம்ஹாவை எனக்கு ஷார்ட் ஃபிலிம்மில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே தெரியும். பிரபாகரன் பயோபிக் எடுத்தால் அவரைத்தான் பிரபாகரனாக நடிக்கவைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நான் இதை பாபியிடம் சொன்னவுடனே, அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார்.
பிரபாகரனைப் பற்றிய அடிப்படையான விஷயங்கள் பாபிக்குத் தெரிந்திருந்தாலும், நான் அவரைப் பற்றி முழுமையாகச் சொன்னபோது, அவர் அந்த கேரக்டரில் நடிக்க இன்னும் ஆர்வமாக இருந்தார். மாணவனாக இருந்த பிரபாகரன், எப்படிப் போராளியாக மாறுகிறார் என்பதை முதல் பாகமாகவும், போராளியான பிரபாகரன் எப்படி தமிழ் ஈழத்தின் தலைவராகிறார் என்பதை இரண்டாம் பாகமாகவும் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் பல்லவியால் தாமதமாகும் சுப்புலட்சுமி படப்பிடிப்பு?

கோவையில் குடும்பத்துடன் வாக்களித்தாா் நடிகை சாய் பல்லவி!

கோவையில் குடும்பத்துடன் வாக்களித்தாா் நடிகை சாய் பல்லவி!
பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

