மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

சின்னதிரை

சில மாதங்களுக்கு முன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் சேரன் தலைமையிலான அணியினர் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளைக் கைப்பற்ற, மீதமுள்ள பதவிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி, சேரன் அணியைவிட கூடுதலாக ஓரிடத்தைப் பிடித்தது எதிரணி.

Updated On :

சில மாதங்களுக்கு முன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் சேரன் தலைமையிலான அணியினர் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளைக் கைப்பற்ற, மீதமுள்ள பதவிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி, சேரன் அணியைவிட கூடுதலாக ஓரிடத்தைப் பிடித்தது எதிரணி.

தொடர்ந்து சின்னதிரை இயக்குநர் சங்கத்துக்கான தேர்தலிலும் தலைவர் ஓர் அணியிலிருந்தும், செயலாளர், பொருளாளர் வேறு அணியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது சின்ன திரை எழுத்தாளர் சங்கத்துக்கான தேர்தலிலும் தலைவர், பொருளாளர் மற்றும் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் ஓர் அணியிலிருந்தும், செயலாளர் மற்றும் தற்போதைய தலைவர் எதிரணியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போது செயலாளராக இருந்த பெருமாள் நெர் மீண்டும் செயலாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்பு தலைவராக இருந்த தாமஸ் கென்னடி துணைத் தலைவராகத் தேர்வாகியிருக்கார். குரு சம்பத்குமார், ஜா.தீபா, கவிதா பாரதி உள்ளிட்டோர் மற்ற பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அண்மையில் காலமானார். ஜெயா டி.வி., விஜய் டி.வி. சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமான இவர், குக் வித் கோமாளி 7-ஆவது சீசனிலும் நடுவராக இருந்தார்.

இவரது மறைவுக்கு நடிகையும், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான திவ்யா துரைசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'எப்போதும் நேர்மறையான எண்ணங்களும், மகிழ்ச்சியான சுபாவமும் கொண்டவர் நீங்கள். 'உன்னைத் திருமணம் செய்துகொள்பவன் மிகவும் அதிர்ஷ்டசாலி... உனக்கு என்னவொரு கைப்பக்குவம்!' என்று என்னை எத்தனையோ முறை பாராட்டியிருக்கிறீர்கள்... எப்பொழுதும் 'அழகான பெண்' என்று அன்போடு அழைப்பீர்கள்' என நினைவு கூர்ந்துள்ளார்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.