இவரது காந்தி காவியத்தைப் பற்றி, தினமணி நாளிதழின் இணைப்பாக அன்றைய நாளில் வெளியான தினமணிச் சுடரில் (1.8.76), ""பள்ள நீர்க்கடல், மங்கை மன்னன், அரியராயினும், கங்கை விஞ்சிடும் காவிரித் தீந்தமிழ், செய்மிகு மொழிவழி, சோலையில் சூழ்குயிலொலி போல, நாமகள் நடனம் புரிந்திட, அஞ்சன விழியே, கயல்விழித் துயிலெழில் போன்ற பாடல்களின் நயம் பற்றி குறிப்பிட்டு, பண்டிதர்களும் திகைக்கும் அளவு செந்தமிழ் நடையில், சந்த அமைப்பில் பல பாடல்கள் இந்நூலில் அமைந்துள்ளன. "பாஞ்சாலி சபதம்' பாடிய பாரதியாரும் துணியாத பெருங்காப்பியம் இயற்றும் நன்முயற்சியில் இந்நூலாசிரியர் ஈடுபட்டு, வெற்றி கண்டிருப்பது பாராட்டத்தக்கது'' என்று பேராசிரியர் என்.வி.வரதராஜ ஐயங்கார் அளித்துள்ள இந்தப் பாராட்டை பதிவு செய்துள்ளது தினமணி நாளிதழ். மேலும்,