விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழ் மரபைக் காப்போம்..!

எத்தனை - எத்துணை    (அ) ஒரு கையில் எத்தனை விரல்கள் இருக்கின்றன?  (ஆ) ஒரு கையில் எத்துணை விரல்கள் இருக்கின்றன?  (அ) நான் எத்தனை நேரமாகக் காத்திருக்கிறேன்?  (ஆ) நான் எத்துணை நேரமாகக் காத்திருக்கிறேன்?  

Updated On :26 செப்டம்பர் 2012, 11:33 am IST

எத்தனை - எத்துணை

 (அ) ஒரு கையில் எத்தனை விரல்கள் இருக்கின்றன?

 (ஆ) ஒரு கையில் எத்துணை விரல்கள் இருக்கின்றன?

 (அ) நான் எத்தனை நேரமாகக் காத்திருக்கிறேன்?

 (ஆ) நான் எத்துணை நேரமாகக் காத்திருக்கிறேன்?

 மேலுள்ள நான்கு தொடர்களிலும் எத்தனை, எத்துணை என்னும் இரு சொற்களும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இவற்றில் ஏதாவது தவறு உண்டா? அல்லது எல்லாமே சரியா? என எண்ணிப் பார்ப்போம். எத்தனை என்னும் சொல்லை ஒன்று, இரண்டு என்று எண்ணி அறியக்கூடிய இடங்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். எத்துணை என்பதை அவ்வாறின்றி மற்ற வகையாக அளந்து அறியக்கூடிய அளவுகளில் எல்லாம் பயன்படுத்தலாம். எத்துணை என்பதன் பொருள் "எவ்வளவு' என்பதுதான். எத்தனை என்பதற்கு ஐந்து, ஆறு என்பனபோல எண்ணிக்கைக் கணக்கில் விடையளிக்கலாம்.

 ÷ஆனால், "எத்துணை' அல்லது எவ்வளவு என்பதற்கு எண்ணிக்கையில் விடை அளிப்பது எல்லா இடங்களிலும் பொருத்தமாயிராது. ஆகவே "எத்துணை' என்பதைக் காலம், பரப்பளவு போன்றவற்றைக் குறிப்பிடும் இடங்களில் பயன்படுத்துவதே மிகவும் பொருத்தமாயிருக்கும். எனவே, மேலுள்ள தொடர்களில் ஒரு கையில் எத்தனை விரல்கள் இருக்கின்றன என்பது சரியான வினாத் தொடர். அடுத்துள்ள இணையில், "நான் எத்தனை நேரமாகக் காத்திருக்கிறேன்' என்பது சரியற்ற தொடர். நான் எத்துணை நேரமாகக் காத்திருக்கிறேன் என்பதுதான் சரியான தொடர். எத்தனை நாழிகையாக, எத்தனை மணிகளாக என்பனவும் சரியான தொடர்களாகும்.

 (புலவர் மா.நன்னனின் "தமிழைத் தமிழாக்குவோம்')

 தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.