காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

தமிழர் கண்ட மாத்திரையும் மனநலமும்!

News image
Updated On :12 டிசம்பர் 2015, 9:53 pm

முனைவர் கா. காளிதாஸ்

ஆதி நந்தமிழர்கள் கண்ட அறிவியல் உண்மைகள் ஏராளமானவை மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்துள்ளன. அறிவியலில் தமிழன் தடம்பதியாத் துறைகளே இல்லை எனலாம். மேலை நாட்டு அறிவர்களான மனநல மருத்துவர்கள் சிக்மன் ஃபிராய்டு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும், யாவரும் நம் தமிழர்களின் மொழிவுகளுக்குப் பின்புதான் தத்தம் கருத்துகளை ஆய்ந்து கண்டறிந்து கூறினார்கள்.

 மூளையைப் பற்றியும் அதன் செயல்படும் விதம் பற்றியும் நம் தமிழ்ச் சித்தர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆய்ந்தறிந்து கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது!

வானியல் போல வயங்கும் பிரமமே

சூனியம் என்றறிந்து ஏத்தாக்கால்

ஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று

ஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே!

(இடைக்காட்டுச் சித்தர்)

என்று வானியலையும் ஊனியலையும் ஒருசேர ஆய்ந்து கண்டவர்கள் நம் மூதாதையர்கள்.

மனமானது அகமனம், புறமனம், அகப்புறமனம் (ஆழ்மனம்) என்ற நிலைகளில் செயலாற்றுகிறது. பெருமூளைக்கும் சிறுமூளைக்கும் இடைப்பட்ட பகுதி "தாலமஸ்' எனப்படும். உணர்வு மற்றும் இயக்கு உணர்வலைகளைக் கடத்தும் முக்கியப் பணியை இஃது செய்கிறது. இதனையே "அமுதகலசம்' என்பர்.

கூட்டிலுள்ள குருவி பறந்தது போல உடம்பை விடுத்து உயிர் பிரியும் (338) என்பார் வள்ளுவர். மனம் மூளையின்பாற்பட்டது. மனம் கட்டளைகளை ஏற்று உடலை இயங்க வைக்கிறது. உயிர் மூளையின்பால் உள்ளது. இதனைக் கூறவந்த வள்ளுவர்,

மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படும் சொல் (453)

என்று கூறுகிறார். உயிர்கள் மனம் செயல்படுவதினாலேயே உணர்ச்சியோடு இயங்குகின்றன (தாலமஸ்). மூளையின் செயல்பாட்டிலேதான் உயிர் உள்ளது என்பது இதிலிருந்து பெறப்படும் ஓர் அரிய கருத்தாகும்.

உயிர் எங்குள்ளது? எனக் கேட்பின், அது பெருமூளை, சிறுமூளை இரண்டிற்கும் இடைப்பட்ட "ஹைப்போதாலம'ஸில் உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர் இன்றைய மருத்துவ அறிவர்கள். ஆயின், நமது மூத்த அறிவர் திருவள்ளுவர், உயிர் உடம்பினுள் உச்சியில், அஃதாவது மூளையில் உள்ளது என எடுத்துரைத்துள்ளார்.

புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்

உச்சி விருந்த உயிர்க்கு (340)

மூளை இறந்தால்தான் இறப்பென்று உறுதிகொள்ள முடியும். அதுவரை உயிர் பிரிந்துவிட்டது எனக் கூறலாகாது என, ஓர் ஒப்பற்ற உயிரியல் கருத்தைக் கூறியவர்கள் நம் தமிழர்களே!

இலக்கணப் புலவரான தண்டியலங்கார ஆசிரியர், மூளைச்சாவைப் பற்றி மேலும் தெளிவுபடக் கூறியுள்ளார். அஃதாவது,

கனிகொள் பொழில் அருவி கைகலந்து சந்தின்

பனிவிரவுப் பாற்கதிர்கள் தோய்ந்து - தனியிருந்தோர்

"சிந்தை உடனே உயிர் உணக்கும்' தென்மலயம்

தந்த தமிழ்மா ருதம்!

(2, பொருட்கார ஏது, தண்டி)

"சிந்தை உடனே உயிர் உணக்கும்' என இப்பாடல் குறிப்பிடும் கருத்து யாதெனில், மனமானது குறைவுபட்டால், மருண்டால், அங்குள்ள உயிரானதும் குறைவுபடும், வாடும், இறக்கும் என்பதாம். இதனையே, "மூளைச்சாவு' என்கிறோம்.

எல்லாவற்றையும் அளக்க மனிதன் கருவிகளைக் கண்டறிந்தான். ஆனால், மூளையின் இயக்கத்தை, உயிர்த்துடிப்பைத் தமிழன்தான் முதலில் கண்டறிந்து கூறினான். இஃது வியப்பிலும் வியப்பாய் உள்ளது!

 மிக நுண்ணிதாய் அறிந்து, நந்தமிழ்ச் சித்தர் தொல்காப்பியர் மூளையின் (உயிரின்) இயக்கத்தை "மாத்திரை' என்றார். இதனைக் கொண்டே எழுத்துகளுக்கு இலக்கணம் செய்தார். மூளை (உயிர்)யானது எல்லா உறுப்புகளுக்கும் கட்டளை இடுகிறது. அவ்வாறு கட்டளையிடும் (நேரமே) கால அளவே மாத்திரை எனப்படும். இந்தக் கால அளவைத் தொல்காப்பியர்,

கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே!

(தொல்.எழுத்.7)

எனக் கூறினார். நன்னூலார் எனும் புலவர், ""இயல்பெழு மாத்திரை நொடி மாத்திரை'' (நன்.எ.45) எனக் கூறினார். இப்புலவர்கள் கூறியுள்ளதை நோக்குங்கால், நோய் நொடியில்லாது வாழும் மனிதனது உயிரின் இயக்கம் ஒரு மாத்திரை அளவினதாய் உள்ளது என்பதை அறியலாம். இதனையே மாணிக்கவாசகரும், ""இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்'' என்றார்.

இமைப்பொழுதானது, கண்ணிமை இரண்டும் பொருந்தி, அழுந்தி விடுகின்ற நேரமாகும். கைந்நொடிப் பொழுதானதும் இவ்வாறே நிகழ்கிறது. இதில் பொருந்த, அழுந்த, விடுகின்ற நேரங்களை நாம் புறத்தில் அறிகிறோம். ஆயினும், பொருந்த அழுந்த, விட, மூளை (உயிர்) யானது எண்ணுகின்ற அக்கால அளவை மிக நுட்பமாக அதில் வைத்துச் சொன்னார்கள் நந்தமிழ்ப் பெரியோர்கள். இதனையே,

""எண்ணல் கால் எடுத்தலரை

முறுக்கல் முக்கால் விடுத்தலொன்றே!'' என்றனர்.

-முனைவர் கா.காளிதாஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.