con என்னும் சொல் எதனைக் குறிக்கிறது? இச்சொல் கணிப்பொறி, அலைபேசி இவற்றின் திரைகளில் இருக்கும் பல்வேறு வண்ணக் குறியீடுகளையும் கோயிற் சிலைகளையும் குறிக்கிறது. The Icon of Lord Nataraja is the symbolic representation of the cosmic dance என்று குறிப்பர். இவையேயன்றிச் சிறந்த கட்டடங்களையும், மனிதர்களையும்கூடக் குறிக்கிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மொகலாயக் கட்டடக்கலையின் சிறந்த சின்னமாகத் திகழ்கிறது. Taj Mahal is the icon of Mogul architecture என்பர். சோழ மன்னர்கள் தாங்கள் வாழ்ந்த அரண்மனைகளைப் பெரிதாகக் கட்டிக்கொள்ளாமல் "அரன்'மனைகளைப் பெரிதாகக் கட்டுவதிலேயே முனைப்பாக இருந்து பல கோயில்களைக் கட்டியிருந்தாலும் அவர்கள் கலைத்திறனுக்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்வது தஞ்சைப் பெருவுடையார் கோயில்தான். The temple at Thanjavur is the icon Chola Architecture என்பர்.
மழைத்துளிகள் எல்லாம் முத்துகள் ஆகிவிடுவதில்லை. பிறக்கும் மனிதர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் ஆகிவிடுவதில்லை. காலம் பலரையும் வென்று விழுங்கிவிடுகிறது. காலத்தை வென்று விழுங்கி நிலைபெற்றவர்கள் மிகச் சிலரே. தமிழின் தவமாய்த் திருவள்ளுவரும், வடமொழியின் வாழ்வாய் வான்மீகி முனிவரும், இந்தியாவின் அடையாளமாய்க் காந்தியடிகளும், திருப்பணியின் சின்னமாய்த் திருநாவுக்கரசரும் திகழ்கிறார்கள். இவர்களால் நாடு பெருமையடைகிறது. எழுத்தாளர் மணியன் "இதயம் பேசுகிறது' என்னும் பயணக் கட்டுரையில் ஜெர்மனியில் குழந்தைகள் இந்தியாவைக் "காந்தி நாடு' என்றும் "நேரு நாடு' என்றும் குறித்ததாகத் தெரிவித்துள்ளார். Thiruvalluvar is the icon of Tamil Wisdom என்பது போல உயர்ந்தவர்களை இச்சொல்லால் குறிப்பர்.
இப்படி வேறுபட்ட பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச்சொல் கண்டறிவது அரிய செயலே.
* எஸ். சுரேஷ் - உரு
* தி. அன்பழகன் - திருப்படிவம்
* சோ. முத்து மாணிக்கம் - புனித உருவம்
* ந. சு. சண்முகம் - சிலை, உருவச்சிலை.
* ச. கிருஷ்ணசாமி - மாமேதை, வல்லுநர்.
* ப. இரா. இராச அம்சன் - குறுஞ்சின்னம், குறளுரு,
குறும்படிவம்.
* சந்திரா மனோகரன் - உருவச்சிலை, தெய்வச்சிலை,
செதுக்கோவியம்.
* கோ. மன்றவாணன் - நுழைவுரு, முகப்புரு, திருவுரு.
* சி. இராமச்சந்திரன் - உரு, தேவவுரு, சுட்டி.
* என். ஆர். ஸத்யமூர்த்தி - சிலை, வணக்கக்குறி, அண்ணல்.
* கா.மு. சிதம்பரம் - தூவுரு, தேவுரு, தான் கரை தொண்டர்.
* ஆனந்த கிருஷ்ணன் - புனித சிலை, திருவுருவம்,
தெய்வ வடிவம்.
* மீனா.கண்ணன் - படக்குறியீடு, உருச்சின்னம்.
இவற்றில், கணிப்பொறிக் குறியீடுகளைக் குறிப்பதற்கு உரு, நுழைவுரு, நிகழ்வுரு ஆகிய சொற்களைக் கருதலாம். தெய்வத் திருமேனிகளைக் குறிப்பதற்குத் திருவுரு, தேவுரு, திருப்படிவம் என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம். புகழ்வாய்ந்த கட்டடங்களையும் பெருமக்களையும் குறிப்பதற்குத் திருவுரு என்னும் சொல்லை ஆளலாம். ஆளுடைய பிள்ளையை, ஞானத்தின் திருவுரு (திருஞா. 728) என்கிறார் தெய்வச் சேக்கிழார்.
இவ்வனைத்தையும் சுட்டும் பொதுச்சொல்லாகச் சுட்டுரு என்பதனை உருவாக்கிக் கொள்ளலாம். கணிப்பொறியின் உருக்களைக் குறிக்கும்போது உள்ளிருக்கும் செயற்பாட்டுக் கருவிகளைச் சுட்டுவதால் சுட்டுரு (சுட்டுகின்ற உரு) என்றும், தெய்வச் சிலைகளையும் பெரியவர்களையும் கட்டடங்களையும் குறிக்கும்போது மதிப்பினைச் சுட்டுவதால் சுட்டுரு (சுட்டை உடைய உரு) என்றும் பொருள்தரும். சுட்டு என்பதனை மதிப்பு என்னும் பொருளில் குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் கையாண்டுள்ளார். ""பிறரால் பெருஞ் சுட்டு (பெருமதிப்பினை அடைய) வேண்டுபவன் மற்றவர் சிறப்புகளை எல்லாம் தூற்றிக் குறைகளை எல்லாம் மறைத்து எப்போதும் பணிவோடு வாழும் தவத்தைச் செய்தல் வேண்டும்'' (நீதி. 19) என்கிறார். திருவுரு என்பதனையும் ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். திரு என்பது பல பொருள்களைத் தரும் சொல். ஆதலின் திருவுரு என்பது அழகிய உரு என்று கணிப்பொறிக் குறியீடுகளையும் மதிப்பு உடைய உரு என்று பிறவற்றையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.
con - சுட்டுரு அல்லது திருவுரு
அடுத்த வாரத்திற்குரிய சொல் : தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை Anchor
என்னும் சொல்லால் குறிக்கிறார்கள் அல்லவா? அதற்கு ஏற்ற தமிழ்ச்சொல் யாது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய இலக்கியச் சிற்பிகள்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வரப்பெற்றோம் (13-04-2026)
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

